மீண்டும் இவரா? பிக்பாஸ் தமிழ் சீசன் 9 அதிரடி அப்டேட்

பிக்பாஸ் தமிழ் சீசன் 9-ன் தொகுப்பாளர் யார் என்ற விவரங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.

பிரபல தொலைக்காட்சியில் மிகவும் பரபரப்பாக ஒளிபரப்பாகிய நிகழ்ச்சி தான் பிக்பாஸ்.

இந்த நிகழ்ச்சி தன்னுடைய எட்டு சீசன்களை வெற்றிகரமாக நிறைவு செய்து விட்டு, தற்போது ஒன்பதாவது சீசனுக்கு தயாராகி வருகின்றது.

கடந்த சீசனை நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கினார். அதற்கு முதல் உள்ள சீசன்களை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்தார்.

ஆண்டவராக வருபவர் யார்?

இந்த நிலையில் விரைவில் பிக்பாஸின் அடுத்த சீசன் தொடங்கவுள்ளது. இம்முறை பிக்பாஸ் சீசனில் பிரபலங்கள் யார் யார் பங்கேற்கப் போகிறார்கள் என்கிற எதிர்பார்ப்பு எழுந்து வருகின்றது. இதனிடையே இந்த சீசனில் பிக்பாஸில் பொதுமக்களும் பங்கேற்கலாம் என தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சி ஏற்பாட்டு குழுவினர் அறிவித்துள்ளனர்.

மேலும், பிக்பாஸ் சீசன் 9 எதிர்வரும் செப்டம்பர் மாதம் தொடங்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

கடந்த ஏழு சீசன்களை போன்று இந்த சீசனையும் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்குவார் என எதிர்ப்பார்த்த வேளையில், இந்த சீசனையும் நடிகர் விஜய் சேதுபதியே தொகுத்து வழங்குவார் என்ற செய்தி வெளியாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *