திடீரென கடுப்பாகி கத்திய SAMANTHA அதிர்ச்சி VIDEO!!!!

சாப்பிட்டவுடன் நெஞ்சு எரிச்சல் ஏற்படுவது ஏன்? தவிர்க்க என்ன செய்ய வேண்டும்?

சாப்பிட்ட உடன் சிலருக்கு நெஞ்சு எரிச்சல் ஏற்படும் பிரச்சனை இருக்கும். இதன் காரணம் என்ன என்பது மற்றும் அதை தவிர்ப்பதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதை பார்ப்போம்.

சாப்பிட்டவுடன் நெஞ்சு எரிச்சல், உணவு எதிர்க்களித்தல் மற்றும் வாந்தி ஆகியவை ஏற்படுவதற்கு உணவுக்குழாய் ரிப்ளக்ஸ் நோய் என்று கூறப்படுகிறது. இது சர்க்கரை நோயாளிகளில் 40% பேருக்கு ஏற்படுவதாக கூறப்படுகிறது.

உணவுக்குழாயின் கீழ் பகுதியில் உள்ள தசை நார்கள் – இரப்பை சந்திக்கும் இடத்தில் வால்வு ஒன்று இருக்கும். நாம் சாப்பிடும் உணவு மேலே செல்வதை இந்த வால்வு தடுக்கிறது. இந்த வால்வு தளர்வடையும் போது, வயிற்றில் இருக்கும் உணவுகள், அமிலம் மற்றும் திறவு திரவங்கள் உணவுக்குழாய் மேல்நோக்கி தள்ளப்படுகிறது.

இதனை தவிர்ப்பதற்கு:

தூங்கும்போது இடது புறமாக தூங்குவது.

தலை மற்றும் உடலின் மேற்ப்பாகம் உயரமாக இருக்குமாறு வைத்து பயன்படுத்த வேண்டும்.

இரவில் குறைந்த அளவு உணவு மட்டுமே உட்கொள்ள வேண்டும்.

இரவு தூங்குவதற்கு மூன்று மணி நேரத்திற்கு முன்னால் உணவு அருந்துதல்.

இரவில் காபி மற்றும் குளிர்பானங்கள் குடிப்பதை தவிர்க்க வேண்டும்.

இரவு நேரத்தில் முட்டைக்கோஸ், வேர்க்கடலை, பூண்டு, கொழுப்பு அல்லது வறுத்த உணவுகளை தவிர்க்க வேண்டும்.

மேலும், உணவை நன்றாக மென்று சாப்பிட வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *