“இருக்கவே பிடிக்கல” அக்காவுக்கு மெசேஜ் அனுப்பிவிட்டு 17 வயது மாணவி விபரீத முடிவு!!

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அடுத்த திருநின்றவூர் நாச்சியார்சத்திரம் விவேகானந்தர் தெருவில் வசித்து வருபவர் 17 வயது சிறுமி. அவர் பிளஸ்-2 படித்து முடித்துள்ளார். இவரது தந்தை உயிரிழந்த நிலையில் மாணவி தனது தாய் மற்றும் அக்காவுடன் வசித்து வந்தார்.

இந்நிலையில், மாணவி அவரது வீட்டுக்கு அருகில் வசிக்கும் இளைஞரை காதலித்து வந்ததாக தெரிகிறது.

இவர்களது காதல் இரு வீட்டாருக்கும் தெரிந்து எதிர்ப்புகள் எழுந்ததால் காதலர்கள் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு கடந்த சில நாட்களாக இருவருமே பேசாமல் இருந்து வந்ததாக தெரிகிறது.

இதனால் மன விரக்தியில் இருந்த மாணவி நேற்று முன்தினம் மாலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தனது அக்கா செல்போனை எடுத்து காதலனுக்கு போன் செய்துள்ளார். ஆனால் காதலன் போனை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இதையடுத்து தனது இன்ஸ்டாகிராம் ஐ.டி.யில் இருந்து “அம்மாவை நல்லா பாத்துக்கோ, எனக்கு இருக்கவே பிடிக்கல, செத்துவிடலாம் என்று தோணுது, பையன் குடும்பத்தை சும்மா விடாதீங்க” என அக்காவிற்கு அனுப்பி விட்டு மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, மாணவி காதல் விவகாரத்தில் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதும் காரணமா என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *