ஹாஸ்பிட்டல்ல அட்மிட் ஆகி ஒரு மாசம் ஆச்சு. இப்பவரைக்கும் மருத்துவமனையோட அறிக்கையும் வெளியாகல. விஎஸ் பாபு அவருக்கு அப்படி என்னதான் ஆச்சு ஏன் அதை பத்தி எந்த ஒரு விஷயமும் சொல்லாம இருக்காங்கன்னு பல கேள்விகள்ங்க. கொளத்தூர் தாவிக்க எம்எல்ஏ விஎஸ் பாபு அவரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு நேற்றோட 50 நாள் ஆயிடுச்சு. செப்டம்பர் 9ஆம் தேதி பாபு அவரு மருத்துவமனையில அனுமதிக்கப்பட்டாங்க. அதுமட்டுமில்லாம விஎஸ் பாபு அவருடைய உடல்நிலை குறித்து எத்தனையோ செய்திகள் வெளியாயிட்டே இருந்துச்சு. 2026 தமிழக சட்டசபை தேர்தல்ல

கொளத்தூர் தொகுதியில அப்போதைய முதல்வர் மூக்க ஸ்டாலின் அவர்களுடைய எதிர்ப்புல போட்டியிட்டு, பாபு அவர் வந்து ஜெயிச்சாரு. அதனால அவருக்கு நல்ல வரவேற்பு இருந்துச்சு. இருந்தாலும் அவருக்கு உடல்நிலை சரியில்ல அப்படின்னு சொன்ன மாதிரி எத்தனையோ விஷயங்கள் வெளியானதில இருந்து நிறைய பேர் அவருக்கு என்ன ஆச்சு ரொம்ப தீவிரமான சிகிச்சையில இருக்காங்கன்னல்லாம் கூட செய்திகளை பரப்புனாங்க. தொடர்ந்து மூச்சு திணரல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனையால பாதிக்கப்பட்ட அவருக்கு தீவிரமான சிகிச்சை கொடுத்திருக்காங்க. சிகிச்சை எல்லாம் தொடர்ந்து கொடுத்துமே அவரோட உடல்நிலை
வந்து தீவிரமா கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் சொல்லியிருந்தாங்க அவரோட உடல்நிலை சீராக இருப்பதாகவும் உடல் சிகிச்சைக்கு ஒத்துழைப்பதாகவும் மருத்துவமனை நிர்வாகம் சொல்லியிருந்தாங்க தற்போது விஎஸ் பாபு அவருடைய உடல்நிலை மோசமடைந்திருக்கிறதாகவும் கவலைக்கடமான நிலையில் மருத்துவமனையோட தீவிர சிகிச்சை பிரிவில்ல அவர் இருக்காருனு நெருக்கமான வட்டாரங்கள் சொல்றாங்க இந்த நிலையில விஎஸ் பாபு அவருடைய உடல்நலன் குறித்து மருத்துவமனை தரப்பில அறிக்கை எதுவுமே வராதது சந்தேகத்தை அதிகப்படுத்தி இருக்கு அவரோட ஆதரவாளர்கள் இந்த விஷயத்தை
சொல்றாங்க. செப்டம்பர் 9ஆம் தேதி விஎஸ் பாபு அவரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில செப்டம்பர் 22 ஆம் தேதி வரைக்கும் அடிக்கடி மருத்துவமனை தரப்பில இருந்து அவரோட உடல்நிலை குறித்த அறிக்கைகள் வெளியிட்டது. பெரும்பாலும் அவருடைய உடல் நலம் நலமாக இருப்பதா கூட மருத்துவர்களோட கண்காணிப்பில இருக்கிறதா மட்டுமே அறிக்கைகள் வந்துட்டு இருக்கு. அவர் எப்படி இருக்காரு? ஏன் இன்னும் வீட்டுக்கு வரலங்கிற செய்தி வரவே இல்லை. செப்டம்பர் 22 ஆம் தேதிக்கு அப்புறமா அக்டோபர் மாதம் முழுவதும் அவரோட உடல்நலன் குறித்து எந்த அறிக்கையும் வெளிவரல. ஒரு
சட்டமன்ற உறுப்பினர் எப்படி இருக்கிறார் அப்படின்னு தெரிஞ்சுக்க அந்த தொகுதி மக்களோட உரிமைதான அது. அவங்க அதனாலதான் தொடர்ந்து கேட்டுட்டு இருக்காங்க. விஎஸ் பாபு அவருடைய உடல்நிலை குறித்து எந்தவித அறிக்கையும் இதுவரைக்கும் ஏன் அளிக்கல? பொதுமக்கள் இதனாலயே குழப்பத்தில இருக்காங்க. அவரோட உடல்நலம் தொடர்பா உரிய விளக்கத்தை அரசு தரப்புல இருந்தும், மருத்துவமனை தரப்புல இருந்தும் வெளியிடணும் அப்படிங்கிற மாதிரியும் கேட்டுட்டு இருக்காங்க. என்ன நடந்திருக்கு? அவர் இப்ப எப்படி இருக்காரு அப்படிங்கிறதெல்லாம் பொறுத்திருந்து
பார்த்தாதாங்க தெரியும். இதுவரைக்கும் மருத்துவமனையோட அறிக்கை வரல. இனிமேலாச்சு அந்த மருத்துவமனை அறிக்கை வெளியிடணும். இது வந்து மக்கள் சார்பா கேட்டுட்டு இருக்காங்க. இல்ல அவர் எப்ப வீடு திரும்புவார்? அவர் இன்னும் மருத்துவமனை ஓய்வுலதான் இருப்பாரா? அப்படிங்கிற கேள்விகளையும் கேட்டுட்டு இருக்காங்க. அதுக்கும் இப்ப வரைக்கும் எந்த ஒரு விளக்கமும் வரல. இதை பத்தி நீங்க என்ன நினைக்கிறீங்கங்கிற உங்களோட கருத்துக்களையும் சொல்லுங்க. இன்னும் இதுபோல சினிமா அரசியல் தகவலை தெரிஞ்சுக்க நம்ம சேனல் கூட இணைஞ்சிருங்க. [இசை]
