மெரிபா பன்னீர் சோடா ஐ ட்ரஸ் மெரிபா. >> நடிகர் ரம்யா கிருஷ்ணனும் அவங்களோட கணவர் டைரக்டர் கிருஷ்ணவம்சியும் பிரிஞ்சிட்டாங்கன்னு சமீப காலமா சோசியல் மீடியால பலரும் பேசிட்டு வராங்க. ரெண்டு பேரும் தனித்தனியா வேற வேற சிட்டிஸ்ல வாழ்ந்துட்டு இருக்காங்க அப்படிங்கிற தகவலும் வெளியாச்சு. இந்த ஒரு சூழ்நிலையில ரம்யா கிருஷ்ணனே இப்ப ஒரு இன்டர்வியூல இதுக்கு விளக்கம் கொடுத்திருக்காங்க. வெளிமனசு படம் மூலமா தமிழ் சினிமாக்கு அறிமுகமான ரம்யா கிருஷ்ணன் வா அருகில் வா, படையப்பா, பஞ்சதந்திரம், பாகுபலி, சூப்பர் டீலக்ஸ், ஜெய்லர்ன்னு பல படங்கள்ல நடிச்சு

ஒரு முன்னணி நடிகையா வளம் வந்துட்டு இருக்காங்க. தமிழ் சினிமா மட்டுமில்லாம தெலுங்கு சினிமாலயும் பல படங்கள்ல நடிச்சிருக்காங்க. அப்படி தெலுங்கு படங்கள்ல நடிக்கும் போதுதான் டைரக்டர் கிருஷ்ணவம்சி கூட பழக்கம் ஏற்பட்டு அது நாளடைவுல காதலா மாறி 2003ல ரெண்டு பேரும் திருமணம் செஞ்சுக்கிட்டாங்க. இவங்களுக்கு ஒரு மகனும் இருக்காரு. இப்படி பல வருஷமா சேர்ந்து வாழ்ந்துட்டு வந்த இவங்க ரெண்டு பேரும் சமீப காலமா பிரிஞ்சிட்டாங்க. வேற வேற வீட்ல வாழ்ந்துட்டு இருக்காங்க அப்படின்னு சோசியல் மீடியால தொடர்ந்து பேசப்பட்டு வந்துச்சு. இந்த விஷயம்
பத்திதான் இப்ப ரம்யா கிருஷ்ணன் ஒரு இன்டர்வியூல ஓபனா பேசி இருக்காங்க. அதுல அவங்க என்ன சொல்லி இருக்காங்கன்னா, நான் எப்போதுமே மேரிட்தான். ஆனா சந்தோஷமா வேற வேற சிட்டிஸ்ல வாழ்ந்துட்டு இருக்கோம். இதுக்கு 100% ப்ரொபஷன் தான் காரணம். நான் சென்னையில சீரியல் பண்ணும்போது 15 நாள் சென்னையில இருப்பேன். 15 நாள் ஹைதராபாத்ல இருப்பேன். எப்பல்லாம் நான் சென்னை வரணும் அப்பல்லாம் என்னோட பையனுக்கு உடம்பு சரி இல்லாம போயிரும். அதனால நான் என்னோட ஹஸ்பண்ட் கிட்ட பேசி என்னோட மகனை சென்னையில ஸ்கூல்ல படிக்க வச்சேன். அது எங்க ரெண்டு பேருக்குமே கன்வினியன்ட்டா
இருந்துச்சு. சொல்லப்போனா நாங்க ரெண்டு பேரும் இப்ப நல்லா பிரெண்ட்ஸா இருக்கோம். தேவையில்லாம சண்டை போட மாட்டோம். அதனாலதான் இன்னும் மேரிடா இருக்கோம் அப்படின்னு நினைக்கிறேன். ரிலேஷன்ஷிப்ப பொறுத்தவரைக்கும் மேரேஜ் அப்படிங்கறது ஒரு ஓவர்ரேட்டட் ப்ராசஸ்ன்னு நினைக்கிறேன். உண்மையாவே கல்யாணம் அவசியம்னு தோணுனா மட்டும்தான் பண்ணிக்கணும். உண்மையா சொல்லணும்னா என்னோட ஹஸ்பண்ட் வம்சி நம்ம ஏன் லிவின் ரிலேஷன்ஷிப்ல இருக்க கூடாது அப்படின்னு அப்பவே சொன்னாரு. நான் அப்பவே அதுக்கு ஓகே சொல்லி இருக்கணும் அப்படின்னு ரம்யா கிருஷ்ணன் பேசி இருக்காங்க. இப்படி
இந்த இன்டர்வியூ மூலமா நாங்க தனித்தனியா வாழ்ந்துட்டு வர்து உண்மைதான். ஆனா இன்னும் கணவன் மனைவியா இருக்கும். டிவோர்ஸ் எதுவும் பண்ணிக்கல அப்படின்னு ரம்யா கிருஷ்ணன் தெளிவா விளக்கம் கொடுத்துருக்காங்க. ஆனா இந்த இன்டர்வியூக்கு கீழ கமெண்ட் பண்ணி இருக்கற சிலர் டிவோர்ஸ் பண்ணிட்டு அவங்க அவங்க வாழ்க்கைய வாழலாமே எதுக்கு பிரிஞ்சிருக்கோம் அப்படிங்கறத வெளிப்படையா சொல்லாம இப்படியா பேசணும் அப்படின்னு அவங்களோட கருத்துக்களையும் சொல்லிட்டு வராங்க. இது ஒரு பக்கம் இருக்க ஜெய்லர் 2 படத்தை தொடர்ந்து ரம்யா கிருஷ்ணன் பாக்கெட் நாவல் மற்றும் ராக்கா
படங்களலயும் நடிச்சிட்டு வராங்க. இந்த படங்களோட அடுத்த கட அப்டேட்ஸும் சீக்கிரமே வெளியாகும்னும் எதிர்பார்க்கப்படுது. >> மெரிபா பன்னீர் சோடா ஐ ட்ரஸ் மெரிபா
