[இசை] யாற்றில் நின்றிருந்த ரயில் பெட்டி உள்ளே இருந்து வீசிய கடும் துர்நாற்றம். எலியோ பெரிச்சாளியோ செத்து கிடக்கிறதோ என எட்டி பார்த்த ஊழியர்களுக்கு இருக்கைக்கு கீழே காத்திருந்த பேர் அதிர்ச்சி என அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்ட ஒரு பெண்ணின் சடலம் அனைவரையும் உரைய வைத்திருக்கிறது. யார் அந்த பெண் கொன்றது யார் என மர்ம முடிச்சுகளை அவிழ்க களமிறங்கிய போலீசாருக்கு அடுத்தடுத்து சிக்கிய சிசிடிவி காட்சிகளும் விரலில் கிடந்த ஒரு தங்க மோதிரமும் திகில் சினிமாவையே மிஞ்சும் திருப்பங்களை கொடுத்திருக்கின்றன. கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில்
சந்திப்பு ரயில் நிலையத்திலிருந்து கேரள மாநிலம் கோட்டையத்திற்கு செல்லும் ரயில் ஒன்று கடந்த 11 ஆம் தேதி பராமரிப்பு பணிகளுக்காக யாடு பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டது. வழக்கம் போல ரயில் பட்டிகளை சுத்தம் செய்யும் பணிகள் நடந்தன. ஆனால் யாரும் எதிர்பார்க்காத வகையில் அந்த ரயிலில் மாற்று திறநாளிகளுக்கான பெட்டிக்குள் ஒரு பெண்ணின் சடலம் மறைத்து வைக்கப்பட்டிருந்தது யாருக்கும் தெரியவில்லை. இந்த சூழ்நிலையில் 18 ஆம் தேதி அந்த பெட்டியிலிருந்து குடலை புரட்டும் அளவிற்கு கடுமையான துர்நாற்றம் வீசி இருக்கிறது. சந்தேகம்அடைந்த ரயில்வே

ஊழியர்கள் பெட்டிக்குள் ஏறி சோதனை செய்த போதுதான் இருக்கைக்கு கீழே அழுகிய நிலையில் கிடந்த அந்த பெண்ணின் சடலத்தை கண்டு அதிர்ச்சியில் உரைந்து போயினர். உடனடியாக நாகர்கோவில் ரயில்வே போலீசாருக்கு தகவல் பறக்க தடையவியல் நிபுணர்களுடன் விரைந்த போலீசார் சடலத்தை கைப்பற்றினர். உடல் மிகவும் அழுகி இருந்ததால் முகத்தை வைத்து அடையாளம் காண முடியவில்லை. உடனடியாக சடலத்தை ஆசாரி பள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. அங்கே வெளியான முதற்கட்ட தகவல்கள் பொலீசாரையே ஒரு கணம் அதிர
வைத்திருக்கிறது. அந்த பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொடூரமாக தாக்கி கொள்ளப்பட்டிருப்பதும் அவரது இடுப்பு மற்றும் விலா எலும்புகள் நொறுக்கப்பட்டிருந்ததும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. இது சாதாரண மரணம் அல்ல. திட்டமிட்ட [இசை] கொடூர கொலை என்பதை உறுதி செய்த காவல்துறை அந்த பெண் யார்? அவரை கடைசியாக சந்தித்தது யார் என்ற கேள்விகளோடு விசாரணையை தீவிரப்படுத்தினர். ரயில் நிலையத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களை சல்லடை போட்டு தேடிய போலீசாருக்கு முதல் துப்பு கிடைத்தது. கடந்த 14ஆம் தேதி நள்ளிரவு 12:30 மணி
அளவில் 50 வயது மதிக்கத்தக்க அந்த பெண் ரயில் நிலையத்திற்குள் நடந்து வரும் காட்சி பதிவாகி இருந்தது. அடுத்ததாக, அதே நாளில் காலை சுமார் 8:00 மணி அளவில் வெள்ளை வேட்டி சட்டை அணிந்த நபர் ஒருவர், சடலம் கிடந்த அதே ரயில் பெட்டியில் இருந்து இறங்கி வெளியே செல்லும் காட்சியும் சிக்கியது. அந்த வெள்ளை வேட்டி நபர் யார்? என பல்வேறு சிசிடிவி காட்சிகளை ஒப்பிட்டு பார்த்ததில் அவர் ஆரல்வாய் மொழி அருகே உள்ள செண்பகராமன் புதூரை சேர்ந்த 31 வயதான ஐயப்பன் என்பது தெரிய வந்தது. தலைமறைவாக இருந்த ஐயப்பன் மலைப்பகுதியில் பதுங்கி இருப்பதை மோப்பம் பிடித்த காவல்
துறையினர் சுற்றி வளைத்து அவரை தட்டி தூக்கினர். போலீசாரின் கிடுக்குப்பிடி விசாரணையில் அந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து தாக்கி கொன்றுவிட்டு சடலத்தை ரயில் பெட்டிக்குள் மறைத்து வைத்துவிட்டு தப்பியதை ஐயப்பன் வாக்கு மூலம் ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது. இதை எடுத்து குற்றம் சாட்டப்பட்ட ஐயப்பனை பொலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். குற்றவாளி சிக்கிவிட்டாலும் கொல்லப்பட்ட பெண் யார் என்ற கேள்விக்கு விடை கிடைக்கவில்லை. [இசை] முகம் சிதைந்திருந்ததால் அடையாளம் காண்பதில் திணறிய போலீசாருக்கு [இசை] அந்த பெண்ணின்
கையில் இருந்த தங்க மோதிரம் ஒரு முக்கிய துப்பாக மாறியிருக்கிறது. மோதிரத்தில் இருந்த ஹால்மார்க் முத்திரையை ஆய்வு செய்ததில் அது குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் தயாரிக்கப்பட்டது என்பது தெரிய வந்தது. இதனால் குஜராத் அல்லது வேறு மாநிலத்தை சேர்ந்தவராக இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை விரிவடைந்துள்ளது. அவர் எந்த ஊரிலிருந்து ரயிலில் வந்தார்? நாகர்கோவிலுக்கு எதற்காக வந்தார்? அவரது குடும்பத்தினர் யார்? என பல கேள்விகளுக்கு விடை தேடி காவல்துறை தற்போது குஜராத் தொடர்பை நோக்கி விசாரணையை திருப்பி இருக்கிறது.
