செம்மணியில் பிளாஸ்டிக் பூமாலையுடன் காணப்பட்ட எலும்புக்கூடு கைதடி சிறிராம் ஐயருடையதா? Photos

1996ம் ஆண்டு 8ம் மாதம் 9ம் திகதி செம்மணி சோதனைச்சாவடியில் கைதடி கந்தசாமி கோவில் குருக்கள் கணேசசர்மாவின் மகனான 22 வயது சிறிராம் படையினரால் மறிக்கப்பட்டு விசாரணைகளு்ககு உட்படுத்தப்பட்ட பின்னர் காணாமல் போயிருந்தார்.

அவர் காணாமல் போன போது அவர் கோவிலில் காணப்பட்ட பிளாஸ்டிக் பூமாலை மற்றும் கோவில் சோடணைகள் சிலவற்றை திருத்த கொடுத்த பின்னர் வெளிவாரிப்பட்டப்படிப்புக்கு தன்னை பதிவு செய்வதற்குமாக கைதடியிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்றதாக அவரது தாயார் சுசிலாதேவி , காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளால் 1997ம் ஆண்டு யாழ் புனித யுவானியார் தேவாலயத்தில் நடந்த உண்ணாவிரதப் போராட்டத்தின் போது கண்ணீர் மல்கக் கூறியிருந்தார். குறித்த சிறிராம் கொண்டு சென்ற பிளாஸ்டிக் மாலை சில வேளை இதுவாக இருக்கலாம் என்று தோன்றுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *