இளையராஜா வீட்டு மருமகளா வனிதா? உண்மையை போட்டுடைத்த பயில்வான்

“இளையராஜா வீட்டிற்கு மருமகளாக ஆகிருக்க வேண்டியது..” என நடிகை வனிதா பேசியதற்கு விமர்சகர் பயில்வான் விளக்கம் கொடுத்துள்ளார்.,தமிழ் சினிமாவில் சாதித்த விஜயகுமாரின் மகள்களில் ஒருவர் தான் நடிகை வனிதா விஜயகுமார். இவர் தமிழ் சினிமாவில் நடித்தது சில படங்கள் என்றாலும் இவரின் பெயரை கேட்டாலே ரசிகர்கள் குஷியாகி விடுகின்றனர். முதல் படமே தளபதியுடன் “சந்திரலேகா” எனும் திரைப்படத்தில் நடித்து பிரபலமாகியிருந்தார்.

தொடர்ந்து சினிமாவில் டாப் நடிகையாக வலம் வருவார் என எதிர்பார்த்த போது திடீரென திருமணம் செய்து கொண்டு செட்டிலாகி விட்டார். வனிதா கடந்த 2000ஆம் ஆண்டு ஆகாஷ் என்பவரைக் காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். இவர்கள் இருவருக்கும் ஸ்ரீஹரி மற்றும் ஜோவிதா என்று இரு பிள்ளைகள் இருக்கிறார்கள்.
பின்னர் ஆகாஷை விவாகரத்து செய்து விட்டார். இதனை தொடர்ந்து ஆனந்த் என்ற தொழிலதிபரை மணந்தார். இவருக்குஜெயனிதா என்ற மகள் இருக்கிறார். மூன்று பிள்ளைகள் இருந்தாலும் மகன் விஜய் ஹரியை அவரின் தந்தை ஆகாஷ்வுடன் இருக்கிறார்.

இதனிடையே பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் மூலம் மீடியாத்துறைக்குள் என்றி கொடுத்தார் வனிதா. வனிதாவின் புதிய திரைப்படம் இந்த நிலையில், வனிதா விஜயகுமார் மற்றும் ராபர்ட் மாஸ்டர் இணைந்து நடித்திருக்கும் Mr & Mrs திரைப்படத்திற்கான ப்ரோமோ சற்று முன்னர் வெளியாகியுள்ளது. இந்த திரைப்படத்தில் சின்னத்திரையில் இருக்கும் பல பிரபலங்கள் இணைந்திருக்கிறார்கள். 40 வயதை தாண்டிய பெண்ணொருவர் குழந்தைபெற்றுக் கொள்ள ஆசைப்படும் கதையை கருவாக வைத்து இந்த திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது.

மொத்தமாக உடைத்த பயில்வான்

இந்த நிலையில் வனிதா விஜயகுமார் திரைப்படம் வெளியான பின்னர், இளையராஜாவிடம் திரைப்படத்தில் அவருடைய பாடலை பயன்படுத்த கேட்டதாகவும், அதற்கு அவர் அனுமதி கொடுத்ததாகவும் பேசியிருந்தார்.
இதற்கு விளக்கம் கொடுத்த பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன்,“ இளையராஜா குடும்பத்தில் யாரும் அப்படிப்பட்டவர்கள் இல்லை. இளையராஜாவின் மகன் கார்த்திக் ராஜா மிகவும் சாந்தமானவர். யாரிடமும் அதிகம் பேச மாட்டார். அப்பாவின் நிழலிலேயே வாழ்ந்து வருகிறார். வனிதா போற போக்கில் அவர் மீது சேற்றை வாரி வீசியுள்ளார் அவருடைய சொந்த மகனுக்கே அவரை பிடிக்காது. அதனால் தான் அந்தப் பையன் அப்பாவுடன் இருக்கிறார். அப்படியென்றால் வனிதா பற்றி தெரிந்து கொள்ளுங்கள்..” என பேசியிருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *