ராதா – அம்பிகாவுக்கு அள்ளி கொடுத்தாரா எம்ஜிஆர்… 100 கோடி ரூபாய் சொத்து… வெளிச்சத்துக்கு வந்த உண்மைகள்!

எம்ஜிஆர் ஆட்சி காலத்தில் நடிகைகள் அம்பிகா ராதாவுக்கு சென்னை போரூரில் எம்ஜிஆர் நிலத்தை வழங்கியது அன்றைய காலகட்டத்தில் மிகப்பெரிய ரகளையாகிவிட்டது. அதுதான் ஏஆர்எஸ் கார்டன். இத்தனைக்கும் அம்பிகா ராதா இருவருமே எம்ஜிஆருடன் ஒரு படத்தில் கூட நடிக்கவில்லை. தன்னுடைய ஊர்க்காரர்கள் என்று அரசு நிலத்தை தந்து விட்டதாக மிகப் பெரிய விமர்சனமே கிளம்பியது.

அதிலும் படுத்த படுக்கையில் அவர்களை கூப்பிட்டு அந்த இடத்தை எம்ஜிஆர் தந்திருந்தார். இந்நிலையில் மூத்த பத்திரிகையாளர் தமிழா தமிழா பாண்டியன் சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசுகையில்,, சென்னையில் ஏவிஎம் ஸ்டுடியோ போலவே ஒரு ஸ்டுடியோவை சொந்தமாக கட்ட வேண்டும் என்று அம்பிகா ராதாவுக்கு நீண்டகால ஆசையாக இருந்தது.

1987ம் ஆண்டில் எம்ஜிஆர் மரணமடையும் தருவாயில் இருந்தார். தங்கள் கோரிக்கையை இரண்டு நடிகைகளும் எம்ஜிஆரிடம் சொல்லவும் அப்போதைய வீட்டு வசதித்துறை அமைச்சராக இருந்த திருநாவுக்கரசை அழைத்து ஏதாவது ஒரு நிலத்தை 99 வருஷத்துக்கு அவர்களுக்கு குத்தகைக்கு எழுதி தந்துவிடுமாறு சொன்னார் எம்ஜிஆர்.

அப்படிதான் வளசரவாக்கம் பகுதியில் 5 ஏக்கர் நிலம் ஒதுக்கி தரப்பட்ட இடத்தில்தான் ஏஆர்எஸ் ஸ்டுடியோ கட்டப்பட்டது. அரசு நிலம் 99 வருஷத்துக்கு இலவசமாக இவர்களுக்கு தரப்பட்டது. செங்கல் சிமெண்ட் கம்பி மொசைக் போன்ற அனைத்தும் மறைந்த காங்கிரஸ் தலைவர் மூப்பனாரால் இலவசமாக வழங்கப்பட்டது. இதன் காரணம் காங்கிரஸ் கட்சியின் வாக்கு வங்கியை உயர்த்துவதற்கு அம்பிகா ராதாவை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று மூப்பனார் அப்போது திட்டமிட்டார்.

இதற்காக ராஜீவ் காந்தியிடமும் இரண்டு நடிகைகளையும் அழைத்துச் சென்று அறிமுகப்படுத்தி வைத்து தமிழகத்தில் இவர்களை வைத்து வாக்கு வங்கியை உயர்த்த முடியும் என்றும் நம்பிக்கை தந்திருந்தார் என்றும் தமிழா தமிழா பாண்டியன் கூறியிருந்தார். இந்நிலையில் சமீபத்தில் சித்ரா லட்சுமணன் பேசுகையில் எம்ஜிஆர் முதல்வராக இருந்தபோது அம்பிகா – ராதா இருவரும் கார்டனை வாங்கினார்கள்.

அப்போது இந்த இடத்தை எம்.ஜி.ஆர் இலவசமாக கொடுத்திருந்தால் அப்போது எதிர்க்கட்சியாக இருந்தவர்கள் சும்மா இருந்திருப்பார்களா? அது அரசு நிலமும் கிடையாது. அது தனியார் நிலம். அவர்களிடமிருந்து தான் ராதா அந்த இடத்தை வாங்கினார். அந்த இடத்திற்கு பக்கத்து இடம் பாரதிராஜாவுடையது. இருவரும் இணைந்து தான் அந்த இடத்தை வாங்கினார்கள். மேலும் அந்த இடம் ஒண்ணே முக்கால் ஏக்கர் தான் என்று விளக்கமும் தந்திருந்தார். இதற்குப் பிறகுதான் அந்த சலசலப்பு ஓய்ந்தது.

அது அரசு நிலம் கிடையாது. இது மல்லிகா என்ற தனிநபர் சொத்தாகும். 1984ம் ஆண்டு எம்ஜிஆர் அந்த ஸ்டுடியோவை திறந்து வைத்தார் என்பதுதான் உண்மை. ஆனால் அரசு நிலத்தை கொடுத்தார் என்பது சுத்தப் பொய். ஒரு சாதாரண விஷயத்துக்கே கருணாநிதி சட்டசபையில் கேள்வி கேட்டபோது நடிகைகளுக்கு அரசு நிலத்தை வழங்கியிருந்தால் சும்மா இருப்பாரா? இது பற்றி எதுவுமே தெரியாத பலர் ஸ்டுடியோ நிலத்தை ராதா அம்பிகாவுக்கு எம்ஜிஆர் கொடுத்ததாக தவறான செய்தியை பரப்பி வருகிறார்கள்.

அந்த இடத்தில் நில வில்லங்க பத்திரங்களின்படி அந்த நிலம் ராதாவின் அசல் பெயரான உதயசந்திரிகா என்ற பெயரில் உள்ளது. இப்போது அதன் மதிப்பு தோராயமாக 100 கோடி ரூபாய் தான். ஆனால் 1000 கோடி ரூபாய் என்று கதைகட்டி விடுகிறார்கள் என்றும் தகவல் பரவி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *