ரஜினியுடன் மோதும் சூர்யா… சத்தமே இல்லாமல் ஒதுக்கும் தனுஷ்… சூர்யாவுக்கு இது தேவை தானா..

நடிகர்கள் தனுஷ் சிவகார்த்திகேயன் மற்றும் சூர்யாவின் படங்கள் அடுத்தடுத்து வெளியாக இருக்கின்றன. தற்போது மூவருமே வித்யாசமான கதைக்களங்களை கொண்ட படங்களில் நடித்திருக்கின்றனர். நடிகர் தனுஷ் தன்னுடைய இயக்கத்தில் அடுத்ததாக இட்லி கடை படத்தை இயக்கியிருக்கிறார். வித்யாசமான குடும்ப கதையாக இருக்கும் என டிரெய்லர் வெளியான நிலையில் பலரும் கூறி வருகின்றனர்.

அதே போன்று நடிகர் மற்றும் இயக்குனர் ஆர்கே பாலாஜி இயக்கத்தில் முதல்முறையாக சாய் அபயங்கர் இசையமைத்துள்ள கருப்பு என்ற படத்தில் நடிகர் சூர்யா நடித்திருக்கிறார். இந்த படமும் பெரிய எதிர்பார்ப்பை ரசிகர்கள் மத்தியில் உருவாக்கி இருக்கிறது. அதேபோல பெரிய வெற்றிக்கூட்டணியான சுதா கொங்காரா இயக்கத்தில் பராசக்தி படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார்.

இந்த படத்தில் சிவகார்த்திகேயனுடன் ரவிமோகன் ஸ்ரீலீலா அதர்வா குரு சோமசுந்தரம் மலையாள நடிகர் பசில் ஜோசப் உள்ளிட்டோரும் நடித்திருக்கின்றனர். இது இந்தி மொழி எதிர்ப்பு போராட்ட வீரர் மொழிப்போர் தியாகி இராசேந்திரனின் பயோபிக் என்பதும் குறிப்பிடத்தக்கது. இப்போது இட்லி கடை பராசக்தி மற்றும் கருப்பு படங்களில் ரிலீஸ் தான் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பேசுபொருளாக மாறி இருக்கிறது.

நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த பராசக்தி படம் பொங்கலுக்கு ரிலீஸாக உள்ளது. விஜய் நடித்த ஜனநாயகனுக்கு போட்டியாக இந்த படத்தை களமிறக்க உள்ளனர். சுமார் வெற்றியாவது இந்த படம் ஈட்ட வேண்டும் என்பதற்காக இந்த வேலை என்று பேசப்படுகிறது. அதுபோல கருப்பு படம் ரிலீஸ் முதலில் பொங்கல் பண்டிகை தான் குறிவைக்கப்பட்டது. ஆனால் ஜனநாயகன், பராசக்தி ஆகிய 2 பெரிய படங்களுடன் வந்தால் கண்டிப்பாக அடிவாங்கும் என்பதால் அது தவிர்க்கப்பட்டது.

அதனால் அடுத்து ஏப்ரல் 14ம் தேதி தமிழ் புத்தாண்டில் சூர்யா நடித்த கருப்பு படத்தை வெளியிட யோசித்து வந்தாலும், அதே நாளில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் 2 படம் ரிலீஸ் செய்யப்படலாம் எனத் தெரிகிறது.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கத்தில் வெளியாகும் ஜெயிலர் 2 படம் வெளியாகும் நேரத்தில் கருப்பு படமும் வெளியாகும் என்பதில் எந்த மாற்றமும் இல்லை,

ஆனால் இதற்கிடையே இவர்களுக்கு விதிவிலக்காக தனுஷ் போட்டுள்ள திட்டம் தான் செம வசூலை அள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. இட்லி கடை வருகிற அக்டோபர் 1ம் தேதி ரிலீஸாகிறது. முதல் இரண்டு நாட்கள் விடுமுறை என்பதால் அதன் பின்னர் வார இறுதி என்பதால் படம் வசூல் குறையாது என நம்பப்படுகிறது. மேலும் இந்த படத்தில் ராஜ்கிரண் சத்யராஜ் பார்த்திபன் அருண் விஜய் என நட்சத்திர பட்டாளமே உள்ளது. நித்யா மேனன் நாயகியாக நடித்திருக்கிறார்.

அதனால் ஆவி பறக்க சுடச்சுட வெளியாகும் இட்லி கடையில் கூட்டம் வசூலை அள்ளிவிடும். மற்ற நடிகர்களைப் போல் இல்லாமல் தனக்கென ஒரு நாளை தேர்வு செய்வதில் எப்போதுமே நடிகர் தனுஷ் வித்யாசமானவர். பெரிய விடுமுறையை பிளான் செய்து பலரும் முட்டி மோதிக் கொண்டுள்ள நிலையில், சாதாரண நாளில் இட்லி கடை படம் வெளிவந்தாலும் ரசிகர்களின் வரவேற்பை பெற்றால் படம் ஜெயிக்கும் என்ற தனுஷின் நம்பிக்கையே இதற்கு முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது. தனுஷ் சூடாக பரிமாறும் இட்லி ருசிக்குமா, ஆறிப் போன இட்லியாக புளிக்குமா என்பது அக்டோபர் 1ம் தேதி தெரிந்து விடும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *