பரபரப்பை உருவாக்கிய சிக்மா படத்தின் ஆடியோ விழா. முதலமைச்சர் விஜயின் மகன் ஜேசன் சஞ்சய் தற்பொழுது சிக்மா என்ற படம் மூலம் இயக்குனராக அறிமுகமாக உள்ளார். அந்த படத்தின் ஆரம்பம், பூஜை, முதல் நாள் படப்பிடிப்பு, தலைப்பு அறிவிப்பு, டீசர் வெளியீடு எனின எதற்குமே விஜய் வாழ்த்து தெரிவித்து ஒரு பதிவு கூட போடவில்லை என்பது ஏற்கனவே செய்தியாக வந்தது. தற்பொழுது அது பற்றி அதிகமாக பேசி வருகிறார்கள். தாத்தா ஒரு திரைப்பட இயக்குனர். பாட்டி ஒரு தயாரிப்பாளர். பாடகி இயக்குனர் என சினிமாவில் பெயர் வாங்கியவர்கள். அவர்கள் கூட பேரன் சஞ்சய்

படத்திற்காக இதுவரை எந்த வாழ்த்தையும் தெரிவிக்கவில்லை. இதனடைய இந்த படம் ஆரம்பம் பற்றி திரைவுரையில் விசாரித்த பொழுது சில தகவல்கள் கிடைத்தது. மகன் விருப்பத்திற்காகவே விஜய் முன்னுரிமை கொடுத்து வந்தார். இயக்குனராக வேண்டும் என்ற ஆசையை சொன்னதுமே முதல் வாழத்தை அப்பொழுதே தெரிவித்து விட்டாராம். லைக்கா நிறுவனம் தமிழில் முதன்முறையாக தயாரித்த படம் விஜய் நடித்த கத்தி. அப்படத்திற்கு பின்புதான் விஜயின் சம்பளம் அதிகமாக உயர்ந்தது. லைக்கா ப்ரொடக்ஷன் தயாரிப்பில் உருவாகி வரும் சிக்மா படத்தில் நடிகர் சந்தீப் கிஷன் கதாநாயகனாக நடித்துள்ளார்.

அவருக்கு ஜோடியாக பிரியா அப்துல்லா நடித்துள்ளார். மேலும் ராஜசுந்தரம், சம்பத்ராஜ், சிவ் பண்டித், யோகி ஜப்பி, ஷீலா ராஜ்குமார் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இசைமைப்பாள தமன் இசைமைத்துள்ளார். முதல் சிங்கிள் ட்ராக் வெளியாகி வரவேற்பையும் பெற்று வருகிறது. அதில் சஞ்சயும் நடனமாடி ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி இருந்தார். ஏற்கனவே வெளியான சிக்மா படத்தின் டீசர் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. வழக்கமான ஆக்ஷன் திரைப்படமாக இல்லாமல் ஹிட், அதிரடி, சஸ்பென்ஸ் மற்றும் உணர்வு பூர்வமான
அம்சங்கள் இணைந்த கதைக்களத்துடன் படம் உருவாகி இருப்பதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகி இருந்தன. தற்போது ஜேசன் சஞ்சை இயக்கும் முதல் படமான சிக்மா திரைப்படத்தின் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. தாத்தா தந்தையின் அடையாளங்களை சாராமல் தனித்து பயணிக்கும் வகையில் முதல் போஸ்டரில் விஜயின் இனிஷயலையும் தவிர்த்தது கவனம் பெற்றது. விரைவில் நடைபெற உள்ள படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் முதலமைச்சர் விஜய் பங்கேற்கலாம் என்ற தகவல் வெளியாகி உள்ளதால் கோலிவுட்டில் பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. மேலும் இந்த விழாவில் சஞ்சயின் அம்மா
சங்கீதாவும் கலந்து கொண்டு மகனுக்கு மேடையில் வாழ்த்து சொல்லி இருப்பதாகவும் கூறப்படுகிறது. அவர் மேடையில் பேசினால் பெரும் பரபரப்பு தமிழகத்தில் ஏற்படும் என்பதில் சந்தேகமில்லை. ஜூலை 31 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள சிக்மா ஜேசன் சஞ்சின் முதல் இயக்குனர் முயற்சிக்கு ரசிகர்கள் எந்த மாதிரியான வரவேற்பை அளிக்க போகிறார்கள் என்பதை தற்பொழுது தமிழ் சினிமா வட்டாரத்தின் முக்கிய எதிர்பார்ப்பாக மாறியுள்ளது.
