80 வயது மூதாட்டியிடம் அத்துமீறிய 19 வயது இளைஞர் – நெஞ்சை உலுக்கும் பின்னணி

80 வயதாகும் மூதாட்டியிடம் இளைஞர் அத்துமீறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இளைஞர் வெறிச்செயல்

ராணிப்பேட்டை, கீழ்விஷாரம் பகுதியில் வசித்துவந்தவர் மூதாட்டி சுசிலா(80). இவரது மாங்காய் தோப்பிற்கு கத்தியவாடி பகுதியைச் சேர்ந்த பத்மநாபன் மகன் நந்தகுமார்(19) என்பவர் மாலையில் வந்துள்ளார்.

நந்தகுமார்

அப்போது போதையில் இருந்த இளைஞர் நந்தகுமார் மூதாட்டியிடம் அத்துமீறி நடந்துள்ளார். மேலும், பாலியல் வன்கொடுமை செய்யவும் முயன்றுள்ளார்.

மூதாட்டி பலி

இதனால் கூச்சலிட்ட மூதாட்டியை ஆத்திரமடைந்த நந்தகுமார் மூதாட்டியை கீழே தள்ளி தரதரவென இழுத்துச் சென்றுள்ளார். இதில் மூதாட்டியின் உடலில் பல்வேறு இடங்களில் பலத்த ரத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இது தொடர்பான சிசிடிவி பதிவு வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து மூதாட்டியின் மருமகள் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து, நந்தகுமார் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *