நாட்டை உலுக்கும் கொரோனா பரவல்; பாதிப்பு 3,758 ஆக அதிகரிப்பு – மிரளவைக்கும் கேரளா

கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது.
கொரோனா தொற்று

சிங்கப்பூர், மலேசியா, ஹாங்காங், தாய்லாந்து போன்ற நாடுகளில் தற்போது கொரோனா தொற்று வேகமெடுக்கத் தொடங்கியுள்ளது. சிங்கப்பூரில் மே மாத தொடக்கத்தில் 14,000 க்கும் மேற்பட்ட பாதிப்புகள் பதிவாகின.

இதனால் உலக நாடுகள் மத்தியில் மீண்டும் கொரோனா பதற்றம் நிலவியுள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸின் புதிய திரிபுகளான NB.1.8.1 மற்றும் LF.7 தொற்று பாதிப்புகள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. அதேசமயம் தமிழ்நாட்டிலும் கொரோனா தொற்று பாதிப்பு பதிவாகி வருகிறது.

என்ன நிலை?

அதன்படி, புதிதாக 363 பேருக்கு கொரோனா தொற்று நேற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் பாதிப்பு எண்ணிக்கை 3,758 ஆக அதிகரிகரித்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. கேரள மாநிலத்தில் அதிகபட்சமாக 1,400 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

குஜாராத்தில் 320 பேருக்கும், மேற்கு வங்கத்தல் 287 பேருக்கம், மஹாராஷ்டிராவில் 485 பேருக்கும், டெல்லியில் 436 பேருக்கும், கர்நாடகாவில் 238 பேருக்கும், தமிழகத்தில் 199 பேருக்கும், உத்தர பிரதேசத்தில் 147 பேருக்கும், ராஜஸ்தானில் 62 பேருக்கும் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

சளி, தொண்டை வலி, இருமல், மூச்சுத் திணறல் உள்ளிட்ட அறிகுறிகள் இருந்தால் கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும். முதியவர்கள், கர்ப்பிணிகள், கடுமையான நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் பொது இடங்களுக்குச் செல்லும்போது, பயணங்களின் போது முகக்ககவசம் அணிய வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *