விஜய்யை நான் அப்படி பார்த்ததே இல்ல! கனடாவில் தான் பழக்கம் – சங்கீதா ஓபன் டாக்

நடிகர் விஜய் பற்றி சங்கீதா பேசிய காணொளி தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

நடிகராக பயணத்தை தொடங்கி அதில் தளபதியாக வளர்ந்து இப்போது தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவியேற்றுவிட்டார் விஜய். தேர்தலுக்கு முன்னதாக அவர் மீது மனைவி சங்கீதா அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து விவாகரத்தும் கோரியிருந்தார்.

விஜய்க்கு நடிகை ஒருவருடன் தொடர்பு இருப்பதாகவும் அதனால் விஜய்யிடம் இருந்து விவாகரத்து கேட்டு மனு தாக்கல் செய்திருந்தார் சங்கீதா. இப்படி ஒரு பக்கம் இருக்க நடிகை த்ரிஷாவிற்கும் விஜய்க்கும் தொடர்ப்பு இருப்பதாக சமூக வலைத்தள பக்கத்தில் பல சர்ச்சைகள் வைரலாகி வந்தன.

ஆனால் இதற்கு விஜய்யோ அல்லது த்ரிஷாவோ எந்த பதிலும் கொடுக்கவில்லை. எனவே இந்த சர்ச்சைகள் எல்லாம் உறுதிப்படுத்தமுடியாதவையாகும். இந்த நிலையில் விஜய் இத்தனை தடைகளையும் தாண்டி தற்போது தமிழ்நாட்டு முதலமைச்சராக மாறி உள்ளார்.

விஜய் பதவியேற்பு நிகழ்வில் சங்கீதாவோ அவரது பிள்ளைகளோ கலந்துகொள்ளவில்லை. இப்படி இருக்க நடிகை சங்கீதா விஜய்யை பற்றி பேசிய காணொளி ஒன்று தற்போது வைரலாகி வருகின்றது.

நடிகை சங்கீதா

நடிகை சங்கீதா சில வருடங்களுக்கு முன்பு கொடுத்த பேட்டி ஒன்று திடீரென இப்போது வைரலாகி உள்ளது. சங்கீதா போசும் போது “நானும், விஜய்யும் பல வருடங்களாக பழக்கம். கிட்டத்தட்ட 25 வருடங்கள் இருக்கும். விஜய் ரொம்பவே ஜாலியான ஆள். செமயாக காமெடி செய்வார். நான் எப்போதுமே அமைதியான விஜய்யை பார்த்தது இல்லை.

வாலு விஜய்யைத்தான் பார்த்திருக்கிறேன். ரொம்பவே ஃபன்னான ஆள். கனடாவில் நானும், விஜய்யும் ஒரு டான்ஸ் செய்தோம். அப்போதிருந்துதான் எங்களுக்குள் பழக்கம் ஏற்பட்டது. அந்த சமயத்தில் விஜய்க்கும், சங்கீதாவுக்கும் திருமணம் நடக்கவில்லை. அவரும் அந்த ஷோவை பார்ப்பதற்காக வந்திருந்தார். அப்போதே சங்கீதாவும்கூட எனக்கு பழக்கம்” என குறிப்பிட்டிருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *