மனசு வலிக்குது தாங்க முடியல தோல்வியால் கலங்கிய ஸ்டாலின்

எலக்சன் எல்லாம் நடந்து முடிஞ்சிருச்சு. ரிசல்ட்டும் வந்துச்சு. ரிசல்ட்டுக்கு பிறகு என்னதெல்லாம் நடந்துச்சு என்ன நடக்குது எல்லாத்தையும் பார்த்துகிட்டுதான் இருக்கோம். ரெண்டு வாரமா எல்லா வீடுகளலையும் நியூஸ் சேனல் தான் ஓடிட்டே இருக்கு. அந்த அளவுக்கு பரபரப்புக்கு பஞ்சம் இல்லாம போகுது. 2026 தேர்தல் முடிவுகளை எடுத்துக்கிட்டா திமுகா ஒரு பெரிய பின்னடைவை சந்திச்சிருக்கு. அதை நாம ஏத்துக்கிட்டுதான் ஆகணும். இது நிச்சயமா நாம எதிர்பார்த்த ரிசல்ட் இல்ல. இதுக்கு அவர் காரணம் இவர் காரணம்னு யாரும் யார் மேலயும் பழி போடாதீங்க. தலைவரா இந்த

தோல்விக்கு நானே பொறுப்பேத்துக்கிறேன். வெற்றி கிடைக்கும்போது எனக்குதான் அந்த கிரெடிட் வந்து சேருது. அப்போ தோல்வி அடையும் போதும் அந்த பழியை நான்தான் ஏத்துக்கணும். அதுதான் ஒரு நல்ல தலைவருக்கான இலக்கணம். சரி தோத்துட்டோம். அதுக்கு அதையே நினைச்சுக்கிட்டு முடங்கிட மாட்டேன். உடனே அப்டேட் ஆகி மீண்டு வருவேன். நாம எல்லாருமே அப்படித்தான் வரணும். அதுக்கு உங்களோட ஆலோசனைகள் பரிந்துறைகள் ஐடியாக்கள் எனக்கு வேணும். எலக்சனா இருந்தாலும் கரெக்ஷனா இருந்தாலும் உங்க கிட்டதான் வந்தாகணும். மக்கள்தான் எல்லாம். இந்த தேர்தல் முடிவுகளுக்கு என்ன

காரணம்? திமுகா இன்னும் எப்படி எல்லாம் உங்களுக்காக உழைக்கணும்னு நீங்க நினைக்கிறீங்கன்னு சொல்லுங்க. உங்களோட கருத்துக்களை ஓப்பனா சொல்லுங்க. அதுக்காகத்தான் இந்த உடன்பிறப்பின் குரல் வெப்சைட். இதுல உங்க கருத்துக்களை பதிவிடுறது ரொம்ப சிம்பிள். உங்க வாய்ஸ்லயே பேசி கருத்துக்களை சொன்னீங்கன்னா அதுவே டைப் ஆகிடும். நேரடியா நீங்களே டைப் பண்ணியும் சொல்லலாம். இல்லன்னா நீங்க பேப்பர்ல எழுதி அந்த போட்டோவை அப்லோட் பண்ணலாம். டாக்குமெண்ட்டா அனுப்பலாம். உங்க கருத்துக்கள் எனக்கு வந்து சேர்ந்துடும். அதையெல்லாம் படிச்சு பரிசீலிச்சு நம்ம

அடுத்த கட்ட நடவடிக்கையை வடிவமைக்க போறேன். நம்முடைய அணுகுமுறை சிந்தனை செயல்பாடு எல்லாத்தையும் மாத்தி ஆகணும். காலத்துக்கு ஏத்த மாதிரி எவால்வ் ஆகித்தான் ஆகணும். உங்க கருத்துக்களின் அடிப்படையில டிஎம் கே 2.0 வரும். கட்சியோட எல்லா லெவல்லையும் தேவையான மாற்றங்களை செய்யப்போறேன். இதனால அடுத்த 100 ஆண்டுகளுக்கும் இந்த இயக்கம் உயிர்ப்போடு இயங்கும். உங்களுக்காக இயங்கும். உடன்பிறப்பே நீங்க சொல்லுங்க நான் கேட்கிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *