நான் மகிழ்ச்சியாக இல்லை. அழுததை பார்த்த இந்திக்காரர்!! நடிகை நமீதா எமோஷனல்…

குஜராத்தை சேர்ந்த நடிகை நமீதா மிஸ் சூரத் பட்டத்தை வென்று மாடலிங் துறையில் கிடைத்த வெளிச்சத்தால் சினிமா வாய்ப்பு பெற்றார். ஜெமினி, ஒக்க ராஜு ஒக்க ரானி போன்ற படங்களில் நடிக்க ஆரம்பித்து அதன்பின் டாப் நடிகையாக மாறினார்.

முன்னணி நடிகர்கள் படங்களில் நடித்த நமீதா, வீரேந்திர செளத்ரி என்பவரை திருமணம் செய்து கொண்டு பல ஆண்டுகள் கழித்து இரட்டை குழந்தைகளுக்கு தாயானார். சமீபத்தில் உடல் எடையை குறைத்து பழைய பார்முக்கு வந்த நமீதா, சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் சில விஷயங்களை எமோஷனலாக பகிர்ந்துள்ளார்.
நான் மகிழ்ச்சியாக இல்லை

நான் வாழ்க்கையில் ரொம்ப கீழ் நிலையில் இருக்கிறேன், மனரீதியாக நான் சந்தோஷமாக இல்லை. அனைத்தும் இருக்கிறது, ஆனால் எதுவும் இல்லை. இந்திக்காரர் ஒருவர் என்னிடம் வந்து ஏன் அழுகிறாய் என்று கேட்டார்.

அதற்கு நான் உடனே ரொம்ப சோகமாக இருக்கிறது, வாழ்க்கையில் என்ன செய்வதென்று எனக்கு தெரியவில்லை என்று சொன்னேன். பின் பிரியா ராமன் என்னுடைய வாழ்க்கையில் வந்ததும் அதையேத்தான் கேட்டார். நான் அதற்கும் ஒரே பதில் தான் சொன்னேன் என்று எமோஷனாலாக பேசியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *