மகளை அழைத்து வரச் சென்ற தந்தைக்கு நேர்ந்த துயரம்!!

காலி, வாதுவ பகுதியில் மேலதிக வகுப்பிலிருந்து மகளை அழைத்து வரச் சென்ற தந்தை ஒருவர் கார் மோதி உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர் வாதுவ மகாவிஹார பகுதியை சேர்ந்த 44 வயதுடைய சுது தேவகே லலித் துஷார என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இந்த நபர் பாணந்துறையிலிருந்து களுத்துறை நோக்கிச் சென்று கொண்டிருந்த போது, ​​பின்னால் வந்த கார் அவர் மீது மோதி காலி வீதியில் உள்ள மின்கம்பத்தில் மோதியது.

காரில் மோதிய நபர் சுமார் 20 மீட்டர் தூரத்திற்கு தூக்கி வீசப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *