இன்று காலை இடம்பெற்ற கோர விபத்து ; ஒரு மணிநேரம் முடங்கிய போக்குவரத்து

இரத்தினபுரி – கொழும்பு பிரதான வீதியில் மீன்னான பகுதியில் பேருந்தும் ஒன்றும் கொள்கலன் லொறி ஒன்றும் மோதி விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்து இன்று (18) காலை நிகழ்ந்ததுடன், விபத்துக்குப் பிறகு கொழும்பு – இரத்தினபுரி பிரதான வீதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டதாக கூறப்படுகின்றது.

விபத்தில் காயமடைந்த சுமார் 18 பேர் எஹெலியகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். எனினும் அவர்களின் நிலைமை மோசமாக இல்லை என்பதுடன், விபத்து குறித்து எஹெலியகொட பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *