யார் தாக்கினாலும் தாக்குவோம்; உலக நாடுகளுக்கு சவால் விடுத்த ஈரான் அதிபர்..!!!

ஈரான் சுப்ரீம் லீடர் ஆயத்துல்லாஹ் அலி காமெய்னி இன்று ஈரான் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.

அவரது உரையில் , அமெரிக்க ஜனாதிபதி சொல்வது போன்று நாங்கள் ஒரு நாளும் சரணடைய மாட்டோம் என்றும் எங்கள் தேசம் முதுகெலும்புள்ள தேசம் என்றும் தெரிவித்துள்ளார்.

அத்தோடு மீண்டும் இஸ்ரேல் எங்கள் மீது தாக்குதல் நடத்தினால் நாமும் அதற்கு தக்க பதிலடி கொடுப்போம் என்று தெரிவித்துள்ள காமெய்னி உலகின் எந்த நாடு தங்கள் மேல் தாக்குதல் நடத்தினாலும் நாமும் தாக்குவோம் என்று தெரிவித்துள்ளார்.

அத்தோடு யூத சியோனிச ரெஜீம் வீழ்ந்துவிட்டது என்று தெரிவித்துள்ள காமெய்னி அமெரிக்க தலையிடா விட்டால் யூத ரெஜீம் முழுமையாக அழிக்கப்பட்டிருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

யூத ரெஜீம் இல்லாமல் போய்விடுமோ என்ற அச்சத்தில்தான் அமெரிக்க இந்த போரில் தலையிட்டது என்றும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *