சிலிண்டர் கசிவால் விபரீதம்.. தாய்-மகள் பலியான சோகம்!!

சமையல் சிலிண்டரில் கியாஸ் கசிவு ஏற்பட்டு வீட்டில் தீப்பிடித்து எரிந்தது. இதில் தாயும், மகளும் பலத்த தீக்காயம் அடைந்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி தாயும், மகளும் பரிதாபமாக உயிரிழந்தனர். காஞ்சீபுரம் மாவட்டம், பிள்ளையார் பாளையம் லிங்கப்பன் பாளையம் ஒத்தவாடை தெருவைச் சேர்ந்தவர்கள் சங்கர்-கோமளா தம்பதியினர்.

இவர்களது மகள் மணிமேகலை (29). இவர் 2வதாக கர்ப்பமடைந்ததால் பூ முடிப்பு நிகழ்ச்சிகாக தனது மகள் கிருபாஷினியுடன் (8) தாய் வீட்டுக்கு வந்துள்ளார். இந்நிலையில், நேற்று முன்தினம் கியாஸ் அடுப்பில் சுடுநீர் வைத்து எடுத்துக் கொண்டு குளியல் அறையில் வைத்து தனது மகளை குளிப்பாட்டிக் கொண்டிருந்துள்ளார்.

அப்போது கியாஸ் கசிவு ஏற்பட்டு வீட்டில் தீப்பிடித்து எரிந்தது. இதில் மணிமேகலையும், அவரது மகளும் பலத்த தீக்காயம் அடைந்தனர். இருவரையும் மீட்டு சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி மணிமேகலையும், அவரது மகள் கிருபாஷினியும் பரிதாபமாக இறந்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *