BREAKING NEWS கூலி படத்திற்காக ரஜினிக்கு வைக்கப்பட்ட ராட்சத கட் அவுட் உலகிலேயே இதுதான் மிக உயரம்!

கருவளையங்கள் தொல்லையா? இயற்கையான வழியில் முக அழகைப் பாதுகாக்கும் எளிய குறிப்புகள்!

தூக்கமின்மை, மன அழுத்தம், ரத்த சோகை, அதிக திரைப்பயன்பாடு, மரபணு போன்ற காரணங்களால் ஏற்படும் கருவளையங்கள், முக அழகை கெடுத்து சோர்வான தோற்றத்தை தரும். இந்த கருவளையங்களை நீக்க சில எளிய இயற்கை வைத்தியங்கள் இதோ:

தக்காளி & எலுமிச்சை சாறு: தக்காளிச் சாறுடன் எலுமிச்சை கலந்து தடவி 15 நிமிடம் கழித்து கழுவலாம்.

கற்றாழை ஜெல்: கருவளையத்தின் மீது தடவி மசாஜ் செய்து இரவு முழுவதும் விட்டு காலையில் கழுவலாம்.

உருளைக்கிழங்கு சாறு: கண்களைச் சுற்றி தடவி உலர விட்டு குளிர்ந்த நீரில் கழுவலாம்.

வெள்ளரிக்காய்: துண்டுகளை கண்களின் மேல் 15-20 நிமிடங்கள் வைக்கவும்.

காபி தூள் கலவை: காபித் தூளுடன் பாதாம் எண்ணெய், விளக்கெண்ணெய் கலந்து மசாஜ் செய்து காலையில் கழுவலாம்.

பாதாம் எண்ணெய்: தினமும் இரவு கருவளையத்தின் மீது தடவி மசாஜ் செய்யலாம்.

கிரீன் டீ பைகள்: பயன்படுத்திய பேக்குகளைக் குளிர வைத்து கண்களின் மேல் 10-15 நிமிடங்கள் வைக்கவும்.

தேங்காய் எண்ணெய்: பஞ்சில் தொட்டு கண்களுக்குக் கீழ் மசாஜ் செய்து வரலாம்.

ரோஸ் வாட்டர்: பஞ்சில் நனைத்து கருவளையம் உள்ள பகுதியில் 15 நிமிடங்கள் வைக்கவும்.

சரியான தூக்கம், சீரான உணவுமுறை, மன அழுத்தத்தைக் குறைத்தல் போன்ற ஆரோக்கியமான வாழ்க்கை முறையும் கருவளையங்கள் வராமல் தடுக்க உதவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *