பிரபல ரிவியில் விரைவில் ஆரம்பமாக இருக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போட்டியாளர்களை குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி நிகழ்ச்சியான பிக்பாஸ் அதிகமான ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ளது. கடந்த 2017ம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகிவரும் இந்நிகழ்ச்சி தற்போதும் மக்களுக்கு பிடித்த நிகழ்ச்சியாக இருந்து வருகின்றது.

இந்நிகழ்ச்சியில் முதல் சீசன் முதல் ஏழாவது 7வது சீசன் வரை கமல்ஹாசன் தான் இந்நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கி வந்தார். ஒவ்வொரு ஆண்டும் பரபரப்பாக செல்லும் இந்நிகழ்ச்சியில் எதிர்பாராத டுவிஸ்ட்டை பிரபல ரிவி வைத்தது. ஆம் இதில் தொகுப்பாளராக இருந்த கமல்ஹாசன் கடந்த ஆண்டு சொந்த வேலை காரணமாக விலகியுள்ளார். பின்பு கடந்த ஆண்டு விஜய் சேதுபதி பிக் பாஸ் சீசன் 8ஐ தொகுத்து வழங்கினார். இந்நிலையில் தற்போது பிக் பாஸ் 9வது சீசனின் அப்டேட் அவ்வப்போது வந்து கொண்டிருக்கின்றது.

தற்போது தமிழில் விரைவில் தொடங்கப்போகும் பிக்பாஸ் 9வது சீசன் குறித்து ஒரு தகவல் வந்துள்ளது. செப்டம்பர் இறுதி அல்லது அக்டோபர் முதல் வாரத்தில் புரொமோ வெளியாகும் என பிக்பாஸ் குழு தரப்பில் தகவல் வந்தது. இந்நிலையில் பிக்பாஸ் 9வது சீசன் போட்டியாளர்கள் சிலரின் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. இதில் பெரும்பாலான போட்டியாளர்கள் சின்னத்திரை பிரபலங்களாகவே இருக்கின்றனர்.

