குரு வீட்டில் உருவாகும் சக்திவாய்ந்த ராஜயோகம் – இந்த ராசிகளுக்கு சொர்க்கம் தான்

வேத ஜோதிடத்தில் சூரியனும் செவ்வாயும் முக்கியமான கிரகங்களாகக் கருதப்படுகின்றனர். இவர்களின் நிலைமாற்றங்கள் ஜோதிடக் கணிப்புகளில் முக்கிய பங்குவகிக்கின்றன.

பொதுவாக செவ்வாய் ஒரு ராசியில் சுமார் 45 நாட்கள் தங்கி, ஒரு முழு சுழற்சியை முடிக்க 18 மாதங்கள் எடுக்கிறார். அதே நேரத்தில், சூரியன் ஒவ்வொரு ராசியிலும் 30 நாட்கள் தங்கி முன்னேறுகிறார்.

வரும் டிசம்பர் 16ஆம் தேதி சூரியன் தனுசு ராசிக்கு நுழைய இருக்கிறார். அந்த நேரத்தில் தனுசு ராசியில் ஏற்கனவே செவ்வாய் இருப்பதால், இவ்விரு கிரகங்களின் சேர்க்கை “மங்கள ஆதித்ய ராஜயோகம்” எனப்படும் சக்திவாய்ந்த யோகம் உருவாகிறது.

ஒரு முழு 18 மாதச் சுழற்சிக்குப் பிறகு செவ்வாய் மீண்டும் தனுசு ராசிக்குச் வந்து, அங்கே சூரியனுடன் இணைவது மிகுந்த ஜோதிட முக்கியத்துவம் கொண்ட நிகழ்வாகக் கருதப்படுகிறது.

இந்த ராஜயோகம் உருவாகும் போது சில ராசிக்காரர்களுக்கு வாழ்க்கையில் முக்கிய முன்னேற்றம், அதிர்ஷ்டம், வெற்றி போன்ற பலன்கள் கிடைக்குமென ஜோதிடம் கூறுகிறது. இந்த ராஜயோகத்தால் அதிகம் பயன் பெறும் ராசிகள் பற்றித் தொடர்ந்து பார்க்கலாம்.

தனுசு

  1. தனுசு ராசிக்காரர்களின் ஜாதகத்தின் முதல் வீடான லக்ன ஸ்தானத்தில் இந்த ராஜயோகம் உருவாகிறது.
  2. உங்கள் ராசியிலேயே இந்த யோகம் உருவாவதால் தனுசு ராசியினருக்கு சிறப்பான காலகட்டம் உருவாகும்.
  3. உங்களின் ஆளுமைத் திறன் மேம்படும். செவ்வாய் பகவான் உங்களுக்கு முழு ஆற்றலையும், துணிச்சலையும், வீரத்தையும் வழங்குவார்.
  4. உங்கள் புத்திசாலித்தனம் அதிகரிக்கும். வாழ்க்கையில் நேர்மறையான மாற்றங்கள் காணப்படும்.
  5. சமூகத்தில் உங்கள் புகழ் உயரும். நிதி நிலைமை மேம்படும். நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிடைக்கும்.

 மேஷம்

  1. மேஷ ராசிக்காரர்களுக்கு 9-வது வீடான பாக்கிய ஸ்தானத்தில் இந்த ராஜயோகம் உருவாகிறது.
  2. இது அதிர்ஷ்ட வீடு என்றும் அழைக்கப்படுகிறது.
  3. எனவே மேஷ ராசிக்காரர்களுக்கு டிசம்பர் 16 முதல் அதிர்ஷ்டத்தின் கதவுகள் திறக்கும்.
  4. தந்தை வழி உறவுகள் மூலம் ஆதாயம் கிடைக்கும்.
  5. தந்தை வழியில் உள்ள பூர்வீக சொத்துக்கள் கைக்கு கிடைக்கும் அல்லது சொத்துக்களில் இருக்கும் பிரச்சனைகள் விலகும்.
  6. உயர்கல்வி அல்லது வெளிநாடு தொடர்பான முயற்சிகள் வெற்றி பெறும்.
  7. நிலுவையில் உள்ள வேலைகளை வெற்றிகரமாக முடிப்பீர்கள். வருமானத்தில் நிலையான உயர்வு ஏற்படும்.
  8. நிதி நிலைமை சீராக இருக்கும்.

கடகம்

  1. கடக ராசிக்காரர்களுக்கு 6-வது வீட்டில் இந்த ராஜயோகம் உருவாகிறது.
  2. இந்த காலகட்டத்தில் கடக ராசிக்காரர்களுக்கு நல்ல இடத்தில் வேலை கிடைக்கும்.
  3. வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு பன்னாட்டு நிறுவனங்களில் நல்ல ஊதியத்துடன் வேலை கிடைக்கும்.
  4. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு அல்லது ஊதிய உயர்வு கிடைக்கலாம்.
  5. எதிர்ப்புகள் விலகி வழக்குகளில் வெற்றி கிடைக்கும். இதுவரை வாட்டி வதைத்து வந்த நோய்கள் அனைத்தும் விலகும்.
  6. ஆரோக்கியத்தில் முன்னேற்றம் காணப்படும். போட்டிகள் நிறைந்த துறைகளிலும் வெற்றியை பெற்று முன்னேறிச் செல்வீர்கள்.

சிம்மம்

  1. சிம்ம ராசியின் ஐந்தாவது வீடான பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் இந்த ராஜயோகம் உருவாகிறது.
  2. இந்த இடம் குழந்தைகள், காதல், புத்திசாலித்தனம் ஆகியவற்றை குறிக்கும் இடமாகும்.
  3. இந்த காலகட்டத்தில் தொழில் மற்றும் வியாபாரத்தில் புதிய முதலீடுகளை செய்வீர்கள். லாபம் பெருகும்.
  4. குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு நல்ல செய்திகள் வந்து சேரும்.
  5. மாணவர்கள் கல்வியில் சிறப்பான முன்னேற்றத்தைக் காண்பார்கள்.
  6. குடும்ப உறவுகள் வலுப்பெறும். உங்களின் அறிவுத்திறன் மேம்படும்.
  7. புதிய வீடு, வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகளும், அசையா சொத்துக்கள் வாங்கும் வாய்ப்புகளும் உருவாகும்.

மீனம்

  1. மீன ராசிக்கு தொழில் ஸ்தானமான பத்தாவது வீட்டில் இந்த ராஜயோகம் உருவாகிறது.
  2. எனவே மீன ராசிக்காரர்கள் டிசம்பர் 16ஆம் தேதிக்குப் பிறகு தொழிலில் எதிர்பாராத முன்னேற்றத்தைப் பெறுவீர்கள்.
  3. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய பொறுப்புகள் வழங்கப்படலாம்.
  4. வியாபாரம் செய்பவர்களுக்கு எதிர்பார்த்து இருந்த ஒப்பந்தங்கள், ஆர்டர்கள் கிடைக்கலாம்.
  5. சமூகத்தில் உங்கள் கௌரவம் உயரும். பணியிடத்தில் உங்கள் திறமைக்கான அங்கீகாரம் கிடைக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *