குறைப்பிரசவத்தில் இரட்டைக் குழந்தைகளா! சமந்தா குறித்து வெளியான தகவலின் உண்மை என்ன?

நடிகை சமந்தாவுக்கு குறைப்பிரசவத்தில் இரட்டைக் குழந்தைகள் பிறந்துவிட்டதாக சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வந்த தகவல், அவரது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால், இந்தத் தகவல் உண்மையல்ல என்பது தற்போது தெரியவந்துள்ளது.

தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழித் திரைப்படங்களில் நடித்து வரும் சமந்தா, இந்த ஆண்டு வெளியான மா இண்டி பங்காரம் திரைப்படத்தின் மூலம் ரூ.100 கோடி வசூல் சாதனையைப் படைத்ததார்.

படத்தின் வெற்றியை ரசிகர்கள் கொண்டாடி வந்த நிலையில், சமந்தா கர்ப்பமாக இருப்பதாக வெளியான தகவல் அவர்களுக்கு மேலும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து, திரைப்படப் பணிகளில் இருந்து சிறிது காலம் ஓய்வு எடுத்துள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.

ரசிகர்களுடன் தொடர்ந்து இணைப்பில் இருக்கும் சமந்தா திரைப்படங்களில் நடிப்பதில் இருந்து ஓய்வில் இருந்தாலும், சமூக வலைதளங்கள் மூலம் ரசிகர்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்து வருகிறார் சமந்தா. குறிப்பாக, தனது கர்ப்பகால புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது பகிர்ந்து வருகிறார்.

குறைப்பிரசவத்தில் இரட்டைக் குழந்தைகளா! சமந்தா குறித்து வெளியான தகவலின் உண்மை என்ன? | Is Samantha Gave Birth To Premature Twin Babies

இதற்கிடையில், பிரபலமான மாஸ்டர் செஃப் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கவும் அவர் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகின.இதற்கான ப்ரோமோ வீடியோவும் சமீபத்தில் வெளியாகி சமூக வலைதளங்களில் கவனம் பெற்றது.
திடீரென பரவிய இரட்டைக் குழந்தைகள் தகவல்

இந்தச் சூழலில், சமந்தாவுக்கு எட்டு மாதங்களிலேயே குறைப்பிரசவம் ஏற்பட்டதாகவும், ஒரு பெண் குழந்தை மற்றும் ஒரு ஆண் குழந்தை பிறந்துள்ளதாகவும் சமூக வலைதளங்களில் தகவல் பரவியது.

மேலும், குழந்தைகள் பிறந்த தகவலை சமந்தா தரப்பு வெளியில் தெரிவிக்காமல் ரகசியமாக வைத்திருப்பதாகவும் சில பதிவுகள் கூறின. இந்தத் தகவல் வேகமாகப் பரவியதால், சமந்தாவின் ரசிகர்கள் பலரும் அதிர்ச்சியடைந்தனர்.

உண்மை என்ன?

ஆனால், சமந்தாவுக்கு தற்போது குழந்தைகள் பிறந்துவிட்டதாக வெளியான தகவலில் உண்மை இல்லை என்பது தெரியவந்துள்ளது.

சமீபத்தில் சமந்தா தனது ஜிம் ஒர்க்-அவுட் வீடியோ ஒன்றையும், தனது கணவருடன் பிக்கில் பால் விளையாடிய வீடியோவையும் சமூக வலைதளத்தில் பகிர்ந்திருந்தார். இந்த வீடியோக்கள், அவருக்கு இன்னும் பிரசவம் நடைபெறவில்லை என்பதைத் தெளிவுபடுத்தியுள்ளன.

குறைப்பிரசவத்தில் இரட்டைக் குழந்தைகளா! சமந்தா குறித்து வெளியான தகவலின் உண்மை என்ன? | Is Samantha Gave Birth To Premature Twin Babies

இதனால், சமந்தாவுக்கு இரட்டைக் குழந்தைகள் பிறந்துவிட்டதாகப் பரவி வந்த தகவல் வெறும் வதந்தி என்பது உறுதியாகியுள்ளது.

தற்போதைய தகவல்களின் அடிப்படையில், சமந்தாவுக்கு வரும் டிசம்பர் மாதம் பிரசவம் நடைபெறும் என மருத்துவர்கள் எதிர்பார்க்கப்படுவதாக கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *