தமிழ் சினிமாவுடைய பிரபலமான தயாரிப்பாளர் கே ராஜன் அவர்கள் வந்துட்டு இப்போ அடையாறு ஆற்றல குதிச்சு தற்கொலை செஞ்சிருக்கற விஷயம்தான் ஒட்டுமொத்த தமிழ் சினிமா வட்டாரங்கள் மத்தியிலயும் மிகப்பெரிய அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கு. அவர் தற்கொலை செஞ்சு இறந்து போறதுக்கு முன்னாடி கடைசி நிமிடங்கள்ல என்னதான் நடந்துச்சு அப்படிங்கிற விஷயங்களும் எப்படி அவர் பாலத்தில இருந்து கீழ குதிச்சாரு அப்படிங்கிற விஷயங்களும் இந்த தற்கொலைக்கான பின்னணி காரணங்களும் தான் இப்போ அடுத்தடுத்த அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கு. தமிழ் திரைப்பட

தயாரிப்பாளர் அப்படிங்கிற விஷயத்தை தாண்டி பல்வேறு பொது விவாதங்கள்ல தன்னுடைய துணிச்சலான கருத்துக்களை தெரிவிச்சு எப்பயுமே தமிழ் சினிமா வட்டாரத்துல ஒரு பரவரப்பான நபரா அறியப்பட்டவர்தான் கே ராஜன் அவர்கள். ஒரு தைரியமான மனுஷன் வந்துட்டு இப்படி நெஞ்சை உழுக்கற விபரீத சம்பவத்தில ஈடுபட்டிருக்கிறது எல்லாருக்குமே பெரும் துயரத்தை ஏற்படுத்தி இருக்கு. இன்னைக்கு மதியானம் கே. ராஜன் அவர்கள் சாப்பிடுறதுக்கு முன்னாடி தன்னுடைய கார்ல டிரைவரோட பயணம் செஞ்சிருக்காரு. அப்ப சரியா அடையார் பாலம் வரும்போது தயாரிப்பாளர் கே. ராஜன் அவர்கள்
திடீரன தன்னுடைய காரை நிறுத்த சொல்லி இருக்காரு. கார் டிரைவரும் வந்துட்டு காரை ஓரமா நிறுத்திய உடனே திடீரன கே ராஜன் அவர்கள் காருடைய கதவை திறந்து கொண்டு வேகமா ஓடியதோட அங்கிருந்த சோற்றுல ஏறி எதிர்பாராத விதமா கீழ ஆற்றுல குதிச்சிருக்காரு. இதை பார்த்து அதிர்ச்சி அடைஞ்ச அந்த கார் டிரைவரும் பக்கத்துல இருந்த பொதுமக்களும் நேரடியா காப்பாற்ற முடியாம உடனே காவல் துறைக்கும் தீயணைப்பு துறைக்கும் தகவல் தெரிவிச்சிருக்காங்க. உடனே சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு துறையினர் வந்துட்டு தீவிர தேடுதல் வேட்டையை நடத்தி ஜேசிபி மற்றும் படகுகள்
உதவியோட கே. கே ராஜன் அவர்களுடைய உடலை மீட்டு, அவருடைய உடலை பிரேத பரிசோதனைக்காக சென்னை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வச்சிருக்காங்க. தான் தற்கொலை செய்யணும் அப்படிங்கறதுக்காகவே, ஒரு உறுதியான முடிவெடுத்துதான், அவர் பாலத்தில இருந்து கீழ குதிச்சிருக்காரு. எந்த விதத்திலயும் யாரும் காப்பாத்திட கூடாது அப்படிங்கறதுக்காகவும், தானும் மனசு மாதிரி தப்பிச்சிட கூடாது அப்படிங்கறதுக்காகவே ஆற்றோடைய நடுப்பகுதியில அதாவது பாலத்தோடைய நடுவுல இருந்து குதிச்சிருக்காரு. மேலும் அந்த இடம்தான் ஆழமா இருக்கும் அப்படிங்கறதுக்காகவே அப்பேற்பட்ட ஆழமான
பகுதியில குதிச்சு தப்பிக்க கூட முயற்சி செய்யாம உள்ள போயிருக்காரு. இதனாலயே மீட்பு பணியும் ரொம்பவே தாமதமா ஆயிருக்கு. தமிழ் சினிமாவுடைய பல்வேறு பிரச்சனைகளுக்காக தொடர்ந்து குரல் கொடுத்தவர் தான் தயாரிப்பாளர் கே ராஜன் அவர்கள். தைரியமான இந்த மனிதர் இப்படி ஒரு முடிவெடுக்கறதுக்கு என்ன காரணம் அப்படிங்கிற மாதிரி அடையாறு காவல் துறையை இப்ப வழக்கு பதிவு செஞ்சு தீவிர விசாரணையை தொடங்கி இருக்காங்க. ஏது குடும்ப பிரச்சனையா? இல்ல அதிகமான கடன் சுமையா? இல்ல அண்மை காலமா அவருக்கு ஏற்பட்ட ஏதேனும் மன உளைச்சலா அப்படிங்கிற மாதிரி
போலீசார் இப்ப மிக தீவிரமான விசாரணையை நடத்திட்டு வந்துட்டு இருக்காங்க. திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் மற்றும் கோலிவுட் வட்டாரத்தில எப்போதுமே கலகலப்பாகவும் அநீதிகளுக்கு எதிராகவும் ரொம்பவே ஆவேசமா பேசக்கூடிய ஒரு நபர்தான் இந்த தயாரிப்பாளர் கே ராஜன் அவர்கள். ஒரு மூத்த கலைஞர் இப்படி தற்கொலை செஞ்சிருக்கிறது ஒட்டுமொத்த தமிழ் சினிமா திரையுலகினர் மத்தியில பெரும் துயரத்தையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கு. கே ராஜன் அவர்கள் பல்வேறு பொது விவாதங்களலையும் பல்வேறு சினிமா சார்ந்த விஷயங்களலையும் தன்னுடைய துணிச்சலான
கருத்துக்களை தெரிவிச்சிருக்காரு. பொது விஷயத்துக்காகவும் நல்ல விஷயத்துக்காகவும் பலர் கிட்டையும் சண்டை போட்ுருக்காரு. இப்படிப்பட்ட ஒரு நல்ல மனிதர் வந்துட்டு இப்படி ஒரு விபரீதமான விஷயத்தை செஞ்சிருக்கிறது மனசுல ஏத்துக்க முடியாத ஒரு சோகத்தை ஏற்படுத்தி இருக்கு. இதை பத்தின உங்களுடைய கருத்துக்களை கீழ இருக்கிற கமெண்ட் பாக்ஸ்ல போஸ்ட் பண்ணுங்க. மேலும் இது போன்ற முக்கிய செய்திகளை தெரிஞ்சுக்க நம்மளுடைய சேனலை சப்ஸ்கிரைப் பண்ணுங்க.
