இளம்பெண்ணை ஐந்தாவது மாடியிலிருந்து தள்ளிவிட்டுக்கொன்ற நபர்!!

டெல்லியில் இளம்பெண் ஒருவரை ஐந்தாவது மாடியிலிருந்து தள்ளிவிட்டுக் கொன்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார். திங்கட்கிழமை காலை 8.30 மணியளவில், டெல்லியிலுள்ள ஜோதி நகர் என்னுமிடத்திலுள்ள ஒரு வீட்டின் ஐந்தாவது மாடியிலிருந்து நேஹா (19) என்னும் இளம்பெண் தள்ளிவிடப்பட்டதாக பொலிசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிசார் இரத்த வெள்ளத்தில் கிடந்த நேஹாவை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துவிட்டார். நேஹாவைக் கொலை செய்ததாக, உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த தௌஃபீக் (26) என்னும் நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில், நேஹாவை, தன் கண் முன்னே தௌஃபீக் தள்ளிவிட்டுக் கொன்றதாக நேஹாவின் தந்தையான சுரேந்தர் குமார் தெரிவித்துள்ளார். தான் தன் மகளைக் காப்பாற்ற முயன்றபோது, தன்னைக் கீழே தள்ளிவிட்டு விட்டு நேஹாவைக் கழுத்தை நெறித்து தௌஃபீக் ஐந்தாவது மாடியிலிருந்து தள்ளிவிட்டதாகவும், தன் கண் முன்னே தன் மகள் தள்ளிவிடப்பட்டும் தன்னால் எதுவும் செய்ய இயலவில்லை என்றும் கண்ணீர் விட்டுக் கதறியுள்ளார் குமார்.

தௌஃபீக்கும் நேஹாவும் அண்ணன் தங்கையாகத்தான் பழகிவந்ததாகவும், சமீபத்தில் தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு நேஹாவை தௌஃபீக் வற்புறுத்தியதாகவும் அதைத் தொடர்ந்து தௌஃபீக்கை எச்சரித்ததாகவும் நேஹாவின் பெற்றோர் தெரிவித்துள்ளனர். உன்னை நாசமாக்கிவிடுவேன் என தௌஃபீக் தன்னை எச்சரித்திருந்ததாக நேஹா தங்களிடம் கூறியதாகவும் அவரது பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *