வணக்கம் தமிழ் அன்பு நெஞ்சங்களே முதல்வர் விஜயிடம் விவாகரத்து கோறி அவரது மனைவி சங்கீதா செங்கல்பட்டு குடும்பநல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ள நிலையில் தாய் சங்கீதா உடனே விஜயின் மகன் ஜேசன் சஞ்சையும் மகள் திவ்யா சாசாவும் வசித்து வருகின்றனர். விஜய் குடும்பத்திலேயே மீடியா வெளிச்சம் அதிகம் படாதவரான மகள் திவ்யா சாசா பற்றி பலரும் அறியாத சுவாரசிய தகவல்களை சுருக்கமாக பார்ப்போம். தற்போது 21 வயதாகும் திவ்யா சாசா 2005ஆம் ஆண்டு செப்டம்பர் 21 ஆம் தேதி விஜய் சங்கீதா தம்பதியினரின் இரண்டாவது வாரிசாக பிறந்தவர். சென்னையில்

உள்ள அமெரிக்கன் இன்டர்நேஷனல் பள்ளியில் தனது பள்ளிப்படிப்பை மேற்கொண்டார். பள்ளி பருவத்திலேயே பேட்மிண்டன் விளையாட்டில் அதிகம் ஆர்வம் கொண்டவராக இருந்த திவ்யா பள்ளியின் பேட்மிண்டன் அணி சார்பாக பல்வேறு போட்டிகளில் பங்கேற்று பதக்கங்கள் வென்றுள்ளார். தனது பாட்டியும் விஜயின் தாயாருமான சோபா சந்திரசேகரிடம் முறைப்படி கர்நாடக இசை கற்று தேர்ந்துள்ள திவ்யா குடும்ப நிகழ்வுகளில் உறவினர்களிடையே பாடல்கள் பாடி அசத்தும் போதெல்லாம் அப்படியே விஜயை போன்று திவ்யா பாடுவதாக உறவினர்கள் பாராட்டுவார்களாம். அட்லி இயக்கத்தில் விஜய் நடித்த தெரி
திரைப்படத்தில் விஜயின் மகளாக கிளைமாக்ஸ் காட்சியில் திவ்யா நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. பள்ளி படிப்பை சென்னையில் முடித்த திவ்யா கனடாவில் கல்லூரி படிப்பை மேற்கொண்டார். அங்கு பிசினஸ் மேனேஜ்மெண்ட் பிரிவில் கல்வி பயின்று வந்தார். இசை மட்டுமின்றி நடனத்திலும் ஆர்வம் கொண்டவரான திவ்யா மேற்கத்திய நடனத்தை முறைப்படி கற்றுத் தேர்ந்துள்ளார். அண்ணன் ஜேசன் சஞ்சை அம்மா செல்லம் என்றால் தங்கை திவ்யா சாசா அப்பா செல்லமாக வளர்ந்துள்ளார். மகளுக்காகவே சினிமா பார்ட்டிகளுக்கு செல்வதை அறவே நிறுத்தி கொண்ட விஜய் சூட்டிங் முடித்த
கையோடு வீட்டிற்கு திரும்பி விடுவாராம். மகளுடனும் மகளின் நண்பர்களை வீட்டிற்கு வரவழைத்து அவர்களுடனும் அரட்டை அடிப்பதை விஜய் அதிகம் விரும்புவாராம். அந்த அளவிற்கு அப்பா செல்லமான திவ்யா கனடாவில் கல்லூரி படிப்பை முடித்து கடந்த வருடம் பட்டம் பெற்றபோது அந்த நிகழ்வில் விஜய் கலந்து கொள்ளாமல் தந்தைக்கு பதிலாக ஜேசன் சஞ்சை கலந்து கொண்டு தனது தங்கையை வாழ்த்தி வரவேற்ற போதே விஜய் குடும்பத்தில் தம்பதிகள் இருவருக்கும் கருத்து வேறுபாடு இருப்பதாக பேச்சு எழுந்தது குறிப்பிடத்தக்கது. என்னதான் அப்பா செல்லமாக இருந்த போதும் தற்போது
முழுக்க முழுக்க தாயின் அரவணைப்பிலேயே வளர்வதால் அப்பாவுடனான தொடர்பு அம்மாவின் கண்டிப்பால் பெரிதாக இல்லாமல் இருக்கும் திவ்யா தனது பாட்டி சோபா சந்திரசேகருடன் நெருங்கிய தொடர்பில் இருந்து வருகிறாராம். தொலைபேசியில் அடிக்கடி பாட்டியுடன் பேசும் திவ்யா அவரது உடல் நலம் மற்றும் தாத்தா சந்திரசேகரின் உடல்நலம் குறித்து அதிகம் அக்கறை எடுத்துக் கொண்டு விசாரிப்பதை வழக்கமாக வைத்துள்ளார். முதல்வராகியுள்ள தந்தையை விரைவில் சந்திக்க வேண்டும் என்கிற விருப்பத்தையும் தனது பாட்டியிடம் அடிக்கடி வெளிப்படுத்தியும் வருகிறாராம்.
கனடாவில் பிசினஸ் மேனேஜ்மென்ட் பிரிவில் பட்டம் பெற்றுள்ள திவ்யா அங்குள்ள கார்ப்பரேட் நிறுவனத்தில் இன்டர்ன்ஷிப் பயிற்சி பெற்றதுடன் தனது தாயார் வசிக்கும் லண்டனுக்கு திரும்பியுள்ளார். இங்கிலாந்து குடியுரிமை பெற்றுள்ள திவ்யா தனது தாத்தாவும் சங்கீதாவின் அப்பாவுமான சொர்ணலிங்கம் பெரும் பிசினஸ் மேனாக இருந்து வருவதை அடுத்து அவரது தொழில்களை நிர்வாகம் செய்ய பயிற்சி பெற்று வருகிறார். பேரன் சஞ்சய் சினிமா டைரக்டராக செயல்பட்டு வரும் நிலையில் பேத்தி திவ்யா சாசாவை தனது தொழில் நிறுவனங்களுக்கான அடுத்த வாரிசாக சொர்ணலிங்கம் உருவாக்கி
வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இது போன்ற செய்திகளை தொடர்ந்து பெற்றிட தமிழ் ட்ரெண்டிங் சேனலை சப்ஸ்கிரைப் செய்யுங்கள். உங்கள் கருத்துக்களை கமெண்ட்டில் பதிவிடுங்கள். நன்றி.
