இன்ட்ரஸ்டிங்கான வீடியோக்களை பார்க்க நம்ம தமிழ் வீடியோஸ் சேனல சப்ஸ்கிரைப் பண்ணிக்கோங்க. மறக்காம பக்கத்துல இருக்குற பெல் பட்டன டச் பண்ணி ஆல் அப்படின்ற ஆப்ஷன் வரும். அதை அழுத்திக்கோங்க. அப்பதான் நாம போடுற புது புது வீடியோக்கள் உங்களுக்கு வந்து கொண்டே இருக்கும். வீடியோக்குள்ள போறதுக்கு முன்னாடி மறைந்த பட்டிமன்ற பேச்சாளர், நடுவர், தமிழ் அறிஞர், தமிழ் பேராசிரியர், சாலமன் பாப்பையா அவர்களுடைய ஆன்மா சாந்தி அடையணும் அப்படின்னு நினைக்கிறவங்க இந்த வீடியோவுக்கு மறக்காம ஒரு லைக் கொடுத்துக்கோங்க. சரி வாங்க வீடியோக்குள்ளார போலாம். சாலமன் பாப்பையா

யார் இந்த சாலமன் பாப்பையா எப்படிப்பட்டவர்? அவருடைய உண்மையான குணம் என்ன? சுருக்கமா சொல்லணும்னா அவர் நல்லவரா கெட்டவரா? அதாவது அவருடைய தொழிலை வைத்து அவருடைய குணத்தை வைத்து அவர் எப்படிப்பட்டவர் அப்படின்ற ஒட்டுமொத்த உண்மைகளையும் இந்த வீடியோவில தெளிவா துல்லியமா பார்க்க போறோம். கடைசி வரை பாருங்க. எல்லாமே உங்களுக்கு சிறப்பா புரியும். பட்டிமன்றம் அப்படின்ற பெயரை சொன்னாலே கேட்டாலே நம்முடைய நினைவுக்கு வருவது சாலமன் பாப்பையா அவர்களதான். பொங்கல் புத்தாண்டு தீபாவளி ஒளி உள்ளிட்ட பண்டிகை நாட்கள் சாலமன் பாப்பையாவின்
பட்டிமன்றத்தோடுதான் தமிழர்களுக்கு தொடங்கும் அப்படின்று சொல்ற அளவுக்கு தமிழர்களின் அன்றாட வாழ்க்கையோட இரண்டரை கலந்துவிட்ட பெருமைக்குரியவர் சாலமன் பாப்பையா அவர்கள். பட்டிமன்றம் புகழ் பேராசிரியர் சாலமன் பாப்பையா அவர்கள் வயது முதிர்வு உடல்நல குறைவு காரணமாக செப்டம்பர் 11ஆம் தேதி மதியம் தன்னுடைய 90 வது வயதில் காலமாகி இருந்தார். அவருடைய வாழ்க்கை பயணத்தை பற்றியோ அவருடைய குணத்தை பற்றியோ எப்படிப்பட்டவர் அப்படின்றத பற்றியோ அவருடைய உண்மையான முகம் என்ன அப்படின்றத பற்றியும் பார்க்கலாம். மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே இருக்கக்கூடிய
சாத்தங்குடி எனும் கிராமத்தில 1936 பிப்ரவரி 22 ஆம் தேதி பிறந்தவர்தான் சாலமன் பாப்பையா அவர்கள். தன்னுடைய குடும்பத்தில ஒன்பதாவதாக பிறந்தவர் பெரிய பெரிய குடும்பம் அப்படின்றதுனால பொருளாதார வசதி இல்லை அதாவது பணத்திற்கே அன்றாட சாப்பாட்டிற்கே பண தேவையை பூர்த்தி செய்ய முடியாத நிலை அவருடைய குடும்பத்திற்கு இருந்தது. கல்வி அதாவது படிப்பதற்கு கூட பணம் இல்லை போராட வேண்டிய ஒரு சூழ்நிலைதான் சாலமன் பாப்பையாவிற்கு. சாலமன் பாப்பையா அவர்கள் தன்னுடைய ஆரம்ப கால கல்வியை மதுரை ஆரப்பாளையம் வெள்ளி வீதியார் மாநகராட்சி பள்ளியிலும் தமிழ்
சுவிசேஷர் லுத்தரன் திருச்சபை பள்ளியிலும் உயர்நிலை கல்வியை மதுரை தல்லாக்குுளம் அமெரிக்கன் கல்லூரி உயர்நிலை பள்ளியிலும் முடித்தார். பின்னர் மதுரை அமெரிக்கன் கல்லூரியில் பொருளாதாரத்தில் இளங்களை பட்டம் பெற்ற சாலமன் பாப்பையா அவர்கள் மதுரை தியாகராசர் கல்லூரியில் தமிழில் முதுகலை பட்டம் பெற்றார். படிப்பு முடித்த பிறகு அமெரிக்கன் கல்லூரியில் பயிற்றுணராக டியூட்டராக மூன்று ஆண்டுகள் பணியாற்றினார். அதன் பிறகு அதே கல்லூரியில் தமிழ் பேராசிரியராக உயர்ந்தார். தமிழ்த்துறை தலைவராகவும் பணியாற்றி ஓய்வு பெற்றார் சாலமன் பாப்பையா
அவர்கள். பள்ளிகள்ல் படிக்கும்போதே பேச்சு போட்டிகளில் கலந்து கொண்டு தன்னுடைய பேச்சு திறனை வளர்த்து கொண்டார். திராவிட இயக்க பேச்சாளர்களான முத்துராமலிங்க தேவர் காமராஜர் உள்ளிட்டோரின் பேச்சுகளால அதிகம் ஈர்க்கப்பட்டவர்தான் சாலமன் பாப்பையா அவர்கள். அதுமட்டுமல்ல குன்றக்குடி அடிகளார் ரா நெடுஞ்செழியன் க அன்பழகன் போன்றோரின் பேச்சாரகங்களை ஒருங்கிணைத்ததன் மூலமா சா கணேசன் குன்றக்குடி அடிகளார் ஆகியோரின் சொற்பொழிவுகளை கேட்டும் தன்னுடைய பேச்சு திறனை மேம்படுத்தி இருக்கின்றார். சாலமன் பாப்பையா அவர்கள் தொடர் வாசிப்பு பயிற்சியின் மூலம் சிறந்த
பட்டிமன்ற பேச்சாளராகவும் நடுவராகவும் வளர்ந்தார். ஆரம்பத்துல அவருக்கு பட்டிமன்றத்தில பேச்சாளராக இருப்பதில்தான் அதிக விருப்பம் இருந்தது. அதன் பிறகு நடுவர் பொறுப்பு அவருடைய அடையாளமாகவே மாறி போனது. சரி இது ஒரு பக்கம் இருக்கட்டும். அவர் யாரு எப்படி பிறந்தார் எப்படி வளர்ந்தாரு எப்படி பட்டிமன்ற பேச்சாளராக மாறினார் அப்படின்றத எல்லாம் தெரிந்து கொண்டிருப்பீங்க. அவருடைய உண்மையான முகம் என்ன மற்றவங்க கிட்ட எப்படி பேசுவாரு எப்படி நடந்து கொள்வாரு அவர் என்னவெல்லாம் பண்ணி இருக்கிறாரு மக்களுக்காக அப்படின்ு பார்க்கும்போது பல விஷயங்கள் அவர்
செய்திருக்கிறார். முதல்ல பட்டிமன்றங்களை வெறும் பொழுது போக்குக்காக மட்டும் நடத்தாம சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தும் ஒரு கருவியாக மாற்றியதுல சாலமன் பாப்பையா அவர்களதான் முக்கியமானவர். பட்டிமன்றம்னா என்ன? சாதாரண பாமர மக்களிடம் கொண்டு சேர்ப்பது எப்படி? எளிய முறையில் பேசுவது எப்படி? அவங்க புரிந்து கொள்ளக்கூடிய அளவிற்கு பட்டிமன்றங்களை எப்படி கொண்டு செல்ல வேண்டும் அப்படின்ற பாமர மக்களுக்கு புரியக்கூடிய வகையில ஒரு பட்டிமன்ற மூலமா சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தி காட்டியவர் சாலமன் பாப்பையா அவர்களதான். அதுவே மிகப்பெரும் மனசுதான்.
பெண்ணுரிமை, குடும்ப உறவுகள், மனித நேயம், கல்வி மற்றும் அன்றாட சமூக பிரச்சனைகளை மையமாக கொண்டு 12000த்திற்கு மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி காட்டி இருக்கிறார் சிறப்பாக சாலமன் பாப்பையா அவர்கள். இளம் வயதில் கடுமையான வறுமை மற்றும் பொருளாதார நெருக்கடிகளை சந்தித்தவர். இருந்தாலும் தமிழ் மொழி மீது கொண்ட பற்றாலும் விடா முயற்சியாலையும் அவர் தமிழ் மொழிக்காகவும் தமிழுக்காகவும் பல விஷயங்களை செய்திருக்கிறார் தமிழ் மொழிக்காக அவர் ஆற்றிய பங்குகள் ஏராளம் என்றுதான் சொல்ல வேண்டும். பல கட்டுரை நூல்களை கொடுத்திருக்கின்றார் எழுதி
இருக்கின்றார். பட்டிமன்றமும் பாப்பையாவும் அப்படின்ட்டு ஒரு கட்டுரை நூல் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் ஓர் பார்வை உரை மலர்கள் சிந்தனை கதிர் திருக்குறள் உரை புறநாானூறு புதிய வரிசை வகை அகனானூறு மூன்று தொகுதிகள் அப்படின்னுட்டு பல நூல்களை எழுதி இருக்கின்றார் சாலமன் பாப்பையா அவர்கள் மிக முக்கியமாக ஒரு தமிழ் ஆய்வாளராக சாலமன் பாப்பையா அவர்கள் திருக்குறள் புரளானூறு அகனானூறு ஆகியவ ற்றிற்கு எழுதிய உரைகள் குறிப்பிடத்தக்கவை கம்பன் [செறுமுதல்] ஆய்வுகளை பதிப்பித்தவராகவும் இருக்கின்றார் சாலமன் பாப்பையா அவர்கள் சரி சாலமன் பாப்பையா அவர்கள் தன்னுடன்
இருப்பவர்கள் கிட்ட சக பேச்சாளர்கள் கிட்ட எப்படி நடந்து கொள்வார் அப்படின்னு கேட்டீங்கன்னா கிட்டத்தட்ட 50 ஆண்டுகளுக்கு மேலாக சாலமன் பாப்பையா அவர்களுடன் பழகிய பாரதி பாஸ்கர் பட்டிமன்ற பேச்சாளர் அவர் பாத்தீங்கன்னா இத்தனை வருட காலத்தில ஒரே ஒரு முறை கூட மனம் நோகும்படி யாரையுமே பேசி நாம் பார்த்ததில்லை அப்படி மற்றவங்களுடைய முன்னேற்றத்திற்காக மட்டுமே அவர் பாடுபடுவாரே தவிர மற்றவங்களுடைய குறைகளை அன்பாக சுட்டி காட்டுவாரே தவிர கோபமாக ஒருபோதும் நடந்து கொள்ள மாட்டார் எப்பேர்பட்ட கடினமான சூழ்நிலைகளையும் நேர்மை மற்றும் மனிதநேய பண்புகள்ல்
இருந்து ஒருபோதும் சாலமன் பாப்பையா அவர்கள் தவறியதே ஐயா பட்டிமன்றங்கள் மூலமாக மற்றும் திரைத்துறையின் மூலமாக கிடைத்த வருமானத்தின் பெரும் பகுதியை ஏழை எளிய மாணவர்களின் கல்வி உதவிக்காக வாரி வழங்கியவர் சாலமன் பாப்பையா அவர்கள் அப்படின்றது பலருக்குமே தெரியாத விஷயம் என்றுதான் சொல்ல வேண்டும். அதாவது சாலமன் பாப்பையா அவர்கள் தன்னுடைய பட்டிமன்றம் வழியாக பல்வேறு கல்வி அறக்கொடை நிறுவனங்களுக்கு நிதி திரட்டவும் உதவி இருக்கின்றார். 2023ஆம் ஆண்டு தான் பயின்ற மதுரை ஆரப்பாளையம் கிராஸ் ரோடு பகுதியில் உள்ள வெள்ளி வீதியார் மாநகராட்சி பள்ளிக்கு
கட்டிட நிதிக்காக ரூபாய் 20 லட்சம் ரூபாய் நன்கொடையாக வழங்கி இருக்கின்றார் அப்படின்றதும் பலருக்குமே தெரியாது. மிக மிக முக்கியமாக விளம்பரங்கள் ஏதுமின்றி பலருக்கும் உதவக்கூடிய இரக்க குணம் சாலமன் பாப்பையா அவர்களிடம் நிறையவே இருந்தது அப்படின்றதும் பலருக்கும் தெரியாது. அதே மாதிரி பட்டிமன்ற நடுவராக இருதரப்பு நியாயங்களையும் பொறுமையாக கேட்டு எந்தவித பாரபட்சமும் இன்றி தார்மீக விழுமியங்களின் அடிப்படையில் தீர்ப்பு வழங்கக்கூடிய சிறந்த நடுநிலை ஆளுமையாக திகழ்ந்தார். அவங்களுக்குதான் சாதகமா தீர்ப்பு கொடுக்கணும். இவங்களுக்கு சாதகமா தீர்ப்பு
கொடுக்கணும் அப்படின்ற மாதிரி எல்லாம் இல்ல. அவங்களை பிடிச்சிருக்கு இவங்களை பிடிக்கல அதனால அவங்களுக்கு சாதகமா இருக்கலாம் அப்படின்ற மாதிரி எல்லாம் தன்னுடைய 50 ஆண்டுகளுக்கு மேலான இந்த பட்டிமன்ற நிகழ்ச்சிகள்ல ஒருபோதுமே அவர் ஒருதலை பட்சமாக நடந்து கொள்ளவில்லை அப்படின்னுட்டு அவருடன் பழகியவர்கள் இந்த தகவலை ரொம்ப பெருமையோடு வெளியிட்டு இருக்காங்க இது எல்லாத்தையும் தாண்டி அதாவது இவருடைய உண்மையான முகம் என்ன உண்மையான குணம் என்ன அப்படின்றத தெரிந்து ந்திருப்பீங்க ஆனால் இவருக்கே சோதனைகள் பல சோதனைகள் நடந்திருக்கின்றது இவர் பலரை
முன்னேற்றி விட்டுருக்கிறார் அப்படி இவங்க நல்லா இருக்கணும் அப்படின்னுட்டு முன்னேற்றி விட்டவர்களே இவருக்கு சோதனையாக மாறி துரோகத்தை மட்டுமே பரிசாக கொடுத்திருக்காங்க இவரால் முன்னேறியவர்கள் அதன் பிறகு இவருடைய கதையை முடிக்கவே திட்டம் போட்டுருக்காங்க அப்படின்றதுதான் கொடுமையான விஷயமே தான் முன்னேற்றிவிட்ட பலர் எனக்கே மிகப்பெரும் சோதனையாக மாறினாங்க துரோகத்தை இழைத்தாங்க தன்னையே தான் இருக்கவே கூடாது அப்படின்னுட்டு சதி திட்டம் எல்லாம் போட்டாங்க அப்படின்னுட்டு ஒருமுறை ஊடக பேட்டி ஒன்றில் மனம் நொந்து சாலமன் பாப்பையா அவர்கள் பேசியிருந்தார்
என்பதும் குறிப்பிட வேண்டிய விஷயம். தமிழ் இலக்கிய உலகிற்கும் பட்டிமன்ற கலைக்கும் இவர் ஆற்றிய அளப்பரிய சேவையை பாராட்டிதான் இந்திய அரசு சாலமன் பாப்பையா அவர்களுக்கு நாட்டின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்மஸ்ரீ விருதை 2021ஆம் ஆண்டு வழங்கி கௌரவித்திருந்தது என்பதும் குறிப்பிட வேண்டிய விஷயம். சாலமன் பாப்பையா யாரு? அவர் எப்படிப்பட்டவரு? அவருடைய உண்மையான குணம் என்ன அப்படின்றதெல்லாம் தெரிந்து கொண்டிருப்பீங்க. சாலமன் பாப்பையா அவர்களை பற்றி நீங்க என்ன நினைக்கிறீங்க? அவருடைய ஆன்மா சாந்தி அடையணும். அவருடைய மறைவுக்கு
ஒரு இரங்கள் தெரிவிக்கணும் அப்படின்னா மறக்காம கமெண்ட்ல சொல்லுங்க.
